தமிழர் தேசம் ஆழமாக நேசித்த அதி வணக்கத்திற்குரிய மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் தனது 80 ஆவது அகவையில் வியாழக்கிழமை அதிகாலை யாழ் மண்ணில் 01.04.2021 இல் மண்ணை விட்டு மறைந்தார்.

தமிழ் மக்களுக்கான நீதிக்காக ஓங்கி ஒலித்த குரல் இன்று அமைதியில் உறங்குகின்றது.

வண. ஆயர் இராயப்பு யோசப்பு அவர்கள் ஈழப்போரின் போது சிறீலங்கா அரசு, மற்றும் சிறீலங்கா படையினரின் பங்களிப்புக் குறித்தும், நாட்டின் மனித உரிமை மீறல் குறித்தும் பெரிதும் விமரிசனம் செய்து வந்தார். இதன் மூலம் அவர் அரச ஆதரவாளர்களின் அச்சுறுத்தல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. மானிட நேயத்தோடு தமிழீழ மக்களின் அவலங்களை சர்வதேசத்திடம் துணிந்து எடுத்துச்சொன்னது மட்டுமல்ல, யுத்தத்தின்போது 146 679 இற்கு மேற்பட்ட தமிழீழமக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவலையும் உலகநாடுகள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்த்தவர் வணக்கத்திற்குரிய  ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள்.

ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் தமிழர்களின் உரிமைக்காக நீண்ட நெடுங்காலமாக குரல் கொடுத்து வந்த ஒருவர் என்பதுடன்,  தமிழ் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் வரலாற்றில் அயராது உழைத்த முன்னாள் ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை அவர்கள் தமிழ்த்தேசியத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பார்.

வணக்கத்திற்குரிய மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களின் வணக்கநிகழ்வு
04.04.2021 ஞாயிறு மாலை 18:00 மணிக்கு நடைபெறும்.

இடம்: அலுவலகம், Trondheims Veien 436
காலம்: 04.04.2021, ஞாயிறு மாலை 18:00 மணி

இந்த வணக்க நிகழ்வு Zoom இணையவழியூடாகவும் நடைபெறும்.
நீங்கள் கீழேயுள்ள இணைப்பை அழுத்தி மாலை 18:00 மணியளவில் இந்த வணக்க நிகழ்வில் இணைந்துகொள்ளலாம்

https://aho.zoom.us/j/65225054114 
Meeting ID: 652 2505 4114

வணக்க நிகழ்வு கொறோனா விதிமுறைகளுக்கமைய நடைபெறும்.

Rayappu Joseph Norway-final