மே 18 – சுடர்ஏற்றும் இணையத்தளம் May 12, 2021 News, TCC அனைவருக்கும் வணக்கம்! https://tamilsresist.com/ என்ற இணையத்தளம் ஊடாக சுடர் ஏற்றி தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவுகொள்ளுவோம். இந்த இணைப்பை உங்கள் உறவினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிவையுங்கள். தமிழினத்துக்கு எதிராக சிறீலங்கா ஆட்சிபீடத்தினால் பல தசாப்தங்களாக பல்வேறு வடிவங்களில் இனஅழிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் உச்சக்கட்டமாக மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அவர்களது வாழ்விடங்களும், உடமைகளும் அழிக்கப்பட்டன. இந்த நாளையே தமிழின அழிப்பு நினைவு நாளாக மே18 இனை, 2009 ற்குப் பின் தமிழ் மக்கள் உலகளாவிய ரீதியில் நினைவுகூர்ந்து நீதிகேட்டுப் போராடுகின்றனர் . சிறீலங்கா அரசபயங்கரவாதத்தின் தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவேந்தி சுடரேற்றி நினைவுகொள்ளும் அதேவேளை, இனப்படுகொலையாளர்களை நீதியின் முன்னிறுத்தி எம் தேசம் விடுதலை பெறும் வரை தொடர்ந்தும் போராடுவோம் என உறுதியெடுப்போம். இந் நினைவேந்தலை https://tamilsresist.com/ என்ற இணையத்தளம் ஊடாக சென்று சுடர் ஏற்றி நினைவுகொள்வதுடன் அனைத்துத்தளங்களிலும் பகிர்ந்துகொள்ளவும்.