மே 18ல் முள்ளிவாய்க்கால் கஞ்சி  உண்போம்
போர்க்கால வாழ்வை மீள்நினைவுபடுத்தும் வகையில் எமது உறவுகளின் உயிர்காத்த அரிசியும், தண்ணீரும், உப்பும் கலந்தாக்கிய «முள்ளிவாய்க்கால் கஞ்சி» யை நாம் எல்லோரும் 18 மே அன்று வீடுகளில் காய்ச்சிப் பருகுவதன் மூலம் அந்த நாட்களின் நினைவுகளை அசைபோடுவோமாக. அடுத்த சந்ததியும் இந்த அழியாத நினைவுகளை மறவாதிருக்க, «முள்ளிவாய்க்கால் கஞ்சி» யை  ஒருநேர உணவாக்குவோம்

சிங்கள அரசின் திட்டமிட்ட உணவுத்தடையும், பல மாத காலத் தொடர் யுத்தத்தினாலும் மக்கள் உணவின்றித் தவித்தனர், பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினிகிடந்தார்கள்,  குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு அலைந்தார்கள். அக் காலகட்டத்தில்  போராளிகளிற்காக   ஒதுக்கப்பட்ட உணவுப்பொருட்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம்   மக்களுக்கு வழங்கியது. அக்காலகட்டத்திலேயே   கஞ்சி வழங்கும் பணியும் தொடங்கப்பட்டது. இறுதிக் காலகட்டத்தில் சிறிய தொகை அரசியே இருந்தபடியால் அரிசியும் தவிடும் கலந்து உப்புமிட்டு முள்ளிவாய்க்கால்க் கஞ்சியாகக் கொடுக்கப்பட்டது. அக்கஞ்சியைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகம்  பல இடங்களில் செய்து மக்களின் பசியை ஆற்றினார்கள். யுத்தம் முடிவுற்றுப் பல ஆண்டுகள் உருண்டோடிப் போனாலும் யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. இவ் யுத்தகால நினைவுகளில் மறக்கமுடியாதவற்றுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த முள்ளிவாய்க்கால்  உப்பு கஞ்சி…!! பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறுகளும் உண்டு. இக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உணவுக்காகப்  பட்ட அவலத்தையும், கஞ்சி உணவே  எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் நினைவேந்தல் நாட்களில் கஞ்சி உணவை வழங்குவது வழமையாகும். மே 18 இன அழிப்பு நாளை நினைவு கூரும் போது  முள்ளிவாய்க்கால் நிலத்தில் விடுதலைக்குப் போராடிய ஈழத்தமிழினம் பட்ட துன்பத்தையும்  உலகத்தமிழினம் நினைவு கூருவது  சாலத் தகுந்தது. இக்கஞ்சி உணவானது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின போது  எமது உறவுகள் உணவிற்காக பட்ட துன்பத்தை  நாம் மட்டுமல்லாது

கஞ்சியை உண்ணும்போது எமது தேசத்தின் வரலாற்றை எம் பிள்ளைகளுக்கு விளக்கி, நினைவுகளை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வோம்.

ஆலயங்களிலும், பொதுஇடங்களிலும் கஞ்சிக்கொட்டில் அமைத்து, முள்ளிவாய்க்கால் கஞ்சியை முடிந்தவரை அனைவருக்கும் வழங்கி, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம்.

நினைவுகளின் நீட்சியே தமிழினவழிப்பின் சாட்சி, இச்சாட்சியே எம்மக்களுக்கான மீட்சியின் வழியென உணர்ந்து  உணர்வுபூர்வமாக மே18 இல் தமிழின அழிப்பு நாளைநினைவுகூருவோம்.

சிங்கள பேரினவாத அரசு இனவழிப்புக்கு ஆயுதமாக பயன்படுத்திய உணவையே நாம் எம் நினைவேந்தலின் வடிவமாக்குவோம்.

நினைவுகளின் நீட்சியே தமிழினவழிப்பின் சாட்சி, இச்சாட்சியே எம்மக்களுக்கான மீட்சியின் வழியென உணர்ந்து  உணர்வுபூர்வமாக மே18 இல் தமிழின அழிப்பு நாளைநினைவுகூருவோம்.

சிங்கள பேரினவாத அரசு இனவழிப்புக்கு ஆயுதமாக பயன்படுத்திய உணவையே நாம் எம் நினைவேந்தலின் வடிவமாக்குவோம்.

pic-1 pic-2 pic-3 pic-4