மே 18 தமிழின அழிப்பு நாள்

இனவெறி பிடித்த சிங்கள அரச பயங்கரவாதம் தன் கோரப்பற்களால் எம் மக்களை குதறி எறிந்த நாட்கள்…

பூவாய், பிஞ்சாய், காயாய், கனியாய், கொத்துக் கொத்தாய் எம் உறவுகளைக் கொட்டிக்கொடுத்த நாட்கள்…

நாளுக்கு நாள், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி தமிழினமே அழிக்கப்பட்டுக்கொண்டிருந்த நாட்கள்…

பசிக்கு உணவில்லை, பச்சிளம் குழந்தைகளுக்கு பாலில்லை, இருக்க இடமில்லை, வலிக்கு மருந்தில்லை, வீழ்ந்தவர்கள் ஒருபுறம் விழுப்புண்பட்டவர்கள் ஒருபுறமாய் எம் உறவுகள் கண்முன்னே துடிதுடித்து எமை விட்டுப் பிரிந்த நாட்கள்.
மே 18 தமிழின அழிப்பு நாள் தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மக்களுக்கு விடும் அறிவித்தல்

மே 18. தமிழின அழிப்பு நாள் நிகழ்வு மாலை 17:00 மணிக்கு பாராளுமன்ற முன்றலில் ஆரம்பிக்கும்.

நினைவேந்தல் நிகழ்வு தற்போது நடைமுறையில் இருக்கும் கொறோனா விதிகளுக்கமைய நடைபெற இருப்பதால் நிகழ்வில் வணக்கம் செலுத்த வரும் பொதுமக்கள் முகக்கவசத்தை அணிந்து வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்

மலர்வணக்கம் செய்யவிரும்பும் மக்கள் பூச்செண்டுகளை நீங்கள் கொண்டு வாருங்கள்.

மாலை 17:00 மணியிலிருந்து 19:00 மணி வரை மக்கள் வந்து வணக்கம் செலுத்திச் செல்ல ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

மே 18. முள்ளிவாய்க்கால் நேரடி ஒலி, ஒளிபரப்பு
1)காலை 11:00 மணிமுதல் இரவு 23:00 மணி வரை தமிழ்முரசம்
2)மாலை  17:00 மணியிலிருந்து 18:00 மணி வரை TTN TV,
3)மாலை 18:00 மணியிலிருந்து பிரத்தயேகமான ஒளிபரப்பு எல்லா நாடுகளையும்  (புலம், தாயகம், தமிழகம்) இணைத்து Zoom இணையத்தளத்தினூடாகவும் இடம்பெறும்.

இந்த ஒலி, ஒளிபரப்பில் அனைத்து மக்களும் இணைந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்
இந்த  ஒலி, ஒளிபரப்பிற்கான இணைப்புக்கள் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

ஒழுங்குகள்
மக்கள் அவை
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

MAY 18. 2021