வணக்கம்,                                                                                                                           23.03.2025

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தமிழ் மொழியைக்  கற்று வந்த 23 மாணவர்களின் அங்கத்துவத்தை, அன்னை பூபதி தலைமை நிர்வாகம் நீக்கியுள்ளது.

அங்கத்துவம் நீக்கப்பட்ட எமது மாணவர்கள் தாய்மொழியைக் கற்பதற்கான உரிமையை அன்னை பூபதி தலைமை நிர்வாகம் மறுதலித்துள்ளது. இதனால் ஏதுமறியாத மாணவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். மேற்படி முடிவானது எமது கல்விநிறுவனத்தின் உருவாக்கத்தின் அடிப்படை நோக்கத்திற்கு முற்றிலும் முரணானது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, எமது கல்வி நிறுவனம் ஆரம்பித்த நாளில் இருந்து நிறுவனத்தின் இறையாண்மையை மதித்தே செயற்பட்டு வருகிறது. ஆனாலும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் உரிமை தொடர்பாக எமது நிலைப்பாட்டை பொது வெளியில் முன்வைக்கவேண்டிய சூழ்நிலையை அன்னை பூபதி தலைமை நிர்வாகம் எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

அன்னை பூபதி தலைமை நிர்வாகம்  கீழ்வரும் விடயங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறோம்.

  • அங்கத்துவம் நீக்கப்பட்ட மாணவர்களின் அங்கத்துவம் மீள வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு தாய்மொழி தமிழ் தொடர்ந்தும் கற்பதற்கான உரிமையை உறுதிசெய்யவேண்டும்.
  • அன்னை பூபதி தலைமை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குழு  உடனடியாக தலையிட்டு  வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தமிழைக் கற்பதற்கு ஆவனசெய்யவேண்டும்.
  • கல்வி நிறுவனத்தில் நிலவும் அனைத்து நிருவாக பிரச்சனைகளையும் பெற்றோருடன் கலந்துரையாடி எமது பாடசாலைகளில் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்தவேண்டும்.
  • அன்னை பூபதி தலைமை நிர்வாகத்தில் நீண்ட காலம் பணியாற்றும் நிர்வாகிகள் புதியவர்களுக்கு வழிவிட்டு பணி ஓய்வு எடுப்பதன் ஊடாகவே, கல்வி நிறுவனம் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் முடிவு எட்டப்படும்.

தமிழ்த் தேசியக் கல்வி நிறுவனத்தை ஒருவர், இருவர் தமது விருப்புக்கும், நிலைப்பாட்டுக்கும் ஏற்ப முடிவுகள் எடுத்து இயக்குவது எமது சமூகத்தில் அமைதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றது. இதனை சரிசெய்வதற்கு ஏனைய நிர்வாகிகள் உங்கள் சனநாயகக் கடமையை உணர்ந்து செயற்படுங்கள். சமூகத்தில் அமைதியை ஏற்படுத்தி, எமது கல்வி நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் வழி நடக்கவைப்பது உங்களது பொறுப்பும், கடமையும் என்பதை உங்களுக்கு தோழமையுடன் கூறுகின்றோம்.

எமது மாணவர்கள்  தமிழ்க்  மொழிக்கல்வியை தடையின்றி தொடர உறுதி செய்வது எல்லோரது கடமையாகும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

 

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நோர்வே

pdf download

த.ஒ.கு அறிக்கை 23.03.2025