1983 யூலை இன அழிப்புப்போர்

இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ் மக்கள் தமது ஆன்மாவில் உரம் ஏற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட யூலை இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த வருடத்துடன் 31 ஆண்டுகள் . ஓடிவிட்டன. தொடர்ச்சியாக ஒரு வார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000க்கு மேற்பட்ட தமிழ் மகக்ள் படுகொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட விடுதலைப் போராளிகளும் மக்களும் படு கொலை செய்யப்பட்டதுடன் தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் எமது தாயக பிரதேசமான வட கிழக்கு பகுதியில்அடைக்கலம் புகுந்தனர். தமிழ் மக்களுக்கான தாயகம் வட கிழக்கு பிரதேசம்தான் என்பதனை இந்நடவடிக்கையின் மூலம் சிங்கள அரசிற்கு நிரூபித்ததால் தமிழ் மக்களின் தாயக விடுதலைப் போராட்டம் மேலும் வலுப்பெறுவதற்கு இச்சந்தர்ப்பம் வழிசமைத்தது. ஆகவே இந்த வலி சுமந்த நாட்களை எதிர்வரும் 23.07.2014 அன்று உலகம் முழுவதும் நினைவுகொள்ளும் அதேவேளை நோர்வேயிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறவுள்ளது