ஆண்டுவிழா

எதிர்வரும் ஐப்பசி மாதம் 17ம் திகதி மாலை 17:00 மணிக்கு Majorstua இல் உள்ள Chateau Neuf மண்டபத்தில் நோர்வே தமிழ்ச் சங்கம் தனது 36 ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடவுள்ளது.

இம்முறை எமது ஆண்டுவிழாவானது நகைச்சுவை மாலையாகவே அமையும். இந் நிகழ்வில் “கலக்கப்போவது யார்” புகழ் பழனி மற்றும் அமுதவாணண் ஆகியோருடன்; ஒஸ்லோ சீலன் மற்றும் சுகிர்தா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இவர்களுடன் பிரபல ”சுப்பர் சிங்கர்” பாடகர் சத்தியபிரகாஸ், “ஹரியுடன் நான்’ நிகழ்வின் வெற்றியாளர் ரவிசங்கர் ஆகியோருடன் சுப்பர் சிங்கர் பின்னணி இசைக்கலைஞர்கள் கீபோட் சிவா, தபோலா குமார் மற்றும் எமது கலைஞர்களுடனான இசைமாலையும், உள்ளுர் கலைஞர்களின் நடனங்களும் இடம்பெறவுள்ளன.

நோர்வே தமிழச் சங்கத்தின் நடப்பாண்டு உறுப்பினர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். அங்கத்தவர்கள் அல்லாதவர்களுக்கு 150 குறோணர்களுக்கு நுளைவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வருடத்திற்கா சந்தாப்பணம் செலுத்திய அங்கத்தவர்களுக்கு இலவச நுழைவுச்சீட்டினை பதிவுசெய்வதற்கான இணைப்பு (link) மின்னஞ்சலில் மிக விரைவில் அனுப்பப்படும். நீங்கள் உங்கள் நுளைவுச்சீட்டினை 30.09ம் திகதிக்கு முன் பதிவுசெய்யவேண்டும். 30.09ம் திகதிக்குப்பின் அங்கத்தவருக்கான இச் சலுகை நிறுத்தப்படும்.

புதிதாக அங்கத்தவர்களாக இணைய விரும்புபவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கிற்கு 0533. 42 86357 சந்தாப்பணத்தினை (kr. 100 for voksen/ 80 for barn) செலுத்தியபின் அப்பற்றுச்சீட்டின் பிரதியை tamilsangam.norge@gmail.com என்னும் முகவரிக்கு அனுப்புமிடத்து உங்களுக்கான அங்கத்துவ இலக்கம்மும் நுழைவுச்சீட்டினை பதிவுசெய்வதற்கான இணைப்பும் (link) அனுப்பிவைக்கப்படும். அதன்பின் நீங்கள் உங்களது இலவச நுழைவுச் சீட்டினை பதிவு செய்யலாம்.

 

மேலதிக விபரங்களுக்கு tamilsangam.norge@gmail.com என்னும் மின்னஞ்சலுடன் தொடர்புகொள்ளவும்.