1983அம் ஆண்டு யூலை 23ல் இருந்து 27 வரை திட்டமிட்டு காட்டுமிராண்டி தனமாக நிறைவேற்றப் பட்டது. 24ஆம் திகதி தமிழர்கள் வாழ்வின் இருண்ட காலம் எனப்படும் கறுப்பு யூலையின் தொடக்க நாள். 25ஆம் திகதி வெலிக்கடை சிறையில் பெரும் கொடூரம் நிறைவேற்றப்பட்டது இலங்கை இராணுவமும் சிங்கள இனவெறி காடையருமாக இணைந்து சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை ஈவிரக்கம் இன்றி கொன்று அளித்தனர். இந்த யூலை மாதமானது தமிழ் மக்களின் ஆத்மாவில் என்றும் ஆறாத கடும் வடுவாக இன்றும் பதிவாகி உள்ளது.

1983 யூலை மாதக் காலபகுதிகளில் ஐக்கியதேசியக் கட்சியே ஆட்சியில் இருந்தது 2009ஆம் ஆண்டு மே 18ஆம் நாள் நடந்தேறிய இனப்படுகொலையின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியில் இருந்தது , எனவே எந்த இனவாத சிங்கள கட்சிகளாக இருந்தாலும் அவர்கள் தமிழ் இனஅழிப்பு என்னும் கோற்ப்பாட்டில் ஒன்றாகவும் நேர்த்தியாகவும் செயல் பட்டு வருகின்றனர்.
உலக நாடுகளோ அல்லது இந்தியாவோ சரி இன்றுவரை இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் வந்துவிடுமே என்ற அச்சத்திலும் அங்கு இரண்டு நாடுகள் உருவாகி விடும் என்ற அச்சத்திலுமே தான் எமது பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார்கள் தவிர எமக்கு தனி நாடு பெற்றுத்தருவதற்காக அன்று. இதுவே தற்போதைய உலக சூழல்
எனவே நாம் எல்லோரும் எமது ஒருமைப் பாட்டை வெளிப்படுத்த வேண்டும். எல்லோருமாக சேர்ந்து பாகுபாடின்றி அரசியல் வழியிலான போரட்டங்களை செய்ய வேண்டும்.