1983 யூலை இன அழிப்புப்போர்

இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ் மக்கள் தமது ஆன்மாவில் உரம் ஏற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட யூலை இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த வருடத்துடன் 31 ஆண்டுகள் . ஓடிவிட்டன. தொடர்ச்சியாக ஒரு வார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000க்கு மேற்பட்ட தமிழ் மகக்ள் படுகொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

மேலும் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட விடுதலைப் போராளிகளும் மக்களும் படு கொலை செய்யப்பட்டதுடன் தமிழ் மக்கள் தென்னிலங்கையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்கள் எமது தாயக பிரதேசமான வட கிழக்கு பகுதியில்அடைக்கலம் புகுந்தனர். தமிழ் மக்களுக்கான தாயகம் வட கிழக்கு பிரதேசம்தான் என்பதனை இந்நடவடிக்கையின் மூலம் சிங்கள அரசிற்கு நிரூபித்ததால் தமிழ் மக்களின் தாயக விடுதலைப் போராட்டம் மேலும் வலுப்பெறுவதற்கு இச்சந்தர்ப்பம் வழிசமைத்தது.

ஆகவே இந்த வலி சுமந்த நாட்களை நினைவு கூறும் வகையில் எதிர்வரும் 23.07.14 நோர்வேஜிய மக்களிற்கான ஒருகவன ஈர்ப்பு நிகழ்வு மாலை 16:00 மணிதொடக்கம் 17:00 மணிவரை Stortinget T-bane இற்கு அருகாமையிலுள்ள Egertorget இல்  நடைபெறும்.

இதனை அடுத்து மறுநாள் 24.07.14 கறுப்புயூலை 31 ம்ஆண்டு நினைவுகூரலும் கண்காட்சியும் மாலை 18:00 மணிக்கு தமிழர்வள ஆலோசனைமையத்தில் (Nedre Rommen 3) நடைபெறும்.

தொடரும் திட்டமிட்ட  இன அழிப்பைதடுத்துநிறுத்துவோம். எம்உரிமையைவென்றெடுக்கஅனைவரும்ஒன்றுபடுவோம்.

ஒழுங்குகள் – நோர்வே ஈழத்தமிழர்அவை

 

 

Black July Video

https://www.youtube.com/watch?v=332mYIyoOqg
https://www.youtube.com/watch?v=G-Sd_GuvLm4

 

https://www.youtube.com/watch?v=a4QvuUnOmmY