Oslo: 12:45 Oslo Kristine Senter Stavanger: 18:00 Lura bydelshus Ulsteinvik: 18:00 Hareid Ungdomskole எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம். வரலாற்றுத் தாய் அவர்களை அரவணைத்துக் கொண்டாள். ஆயிரமாயிரம் தனிமனித உயிர்கள் வரலாற்றின் கருவூலத்தில் சங்கமித்தன. அவ்வுயிர்கள் கருவாகி, காலத்தால் உருவம்பெற்று, தேசத்தின் விடுதலையாக வடிவம் பெற்று வருகிறது. தமிழீழம் என்ற அந்த விடுதலை நாடு வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த விடுதலை நாட்டின் உயிர்ப்பாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கைத்தீவில் சிங்கள இனவாதிகள் ஆட்சிபீடம் ஏறிய காலத்திலிருந்து தமிழர் நிலம் விழுங்கப்பட்டு வருகிறது. தமிழர் நிலத்தைக் கவர்ந்து சிங்கள மயமாக்குவது ஒரு புறமும், தமிழர் நிலத்தைப் பறித்து, அதன் வளங்களை அழித்து, அங்கு வாழ்ந்த மக்களை ஏதிலியர் ஆக்குவது இன்னொரு புறமுமாக, எமது நிலம் மீதுகொடுமை நிகழ்ந்து வருகிறது. இந்த அநீதிக்கு எதிராகவே மாவீரர்கள் போராடினார்கள் ஆகவே அன்பான உறவுகளே! விடுதலையின் விடிவெள்ளிகளாய் எம் கண்முன்னே வாழ்ந்த புனிதர்களை போற்றும் நாளான 27.11.2015 மதியம் 12;45 மணிக்கு நாம் எல்லோரும் ஒன்று கூடி மாவீரர்களை வணங்கி விடுதலைக்காய் நிமிர்வோம் OrganizerName:TCCVenue DetailsInformation