நினைவெழுச்சி நிகழ்வு எதிர்வரும் 27.09.2014 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு Grorud Samfunnshus மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் அவர்கள் 15.09.1987 அன்று நல்லூர்க் கந்தசாமி கோயிலின் முன்பாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துச் சாகும் வரையிலானஉண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். இந்திய வல்லாதிக்கத்தின் கண்களைத் திறப்பதற்காக அவர் மேற்கொண்ட அந்தத் தியாகப் பயணத்தில் 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் மனக்கட்டுப்பாட்டுடன் இருந்து தமிழ் பேசும் மக்களின் விடுதலைத்தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்தபின் 26. 09.1987 அன்று ஈகச்சாவு அடைந்தார். யாருமே செய்யமுடியாத அந்த உன்னத தியாகத்தை தமிழ் இனத்துக்காக செய்த தியாகதீபம் திலீபன் இந்திய சதியால் கொல்லப்பட்ட குமரப்பா புலேந்திரன் உட்ப்பட பன்னிருவேங்கைகள் இந்திய இராணுவத்துடனானமோதலில் வீரச்சாவை தழுவிக்கொண்ட முதற் பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதி வான்படைகண்ட தலைவனுக்கு வான்படையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த கேணல் சங்கர் தமிழீழத் தேசியத்தலைவர்அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி கேணல் ராயு சர்வதேசப்பரப்பில் நின்று விடுதலைக்காக அயராது அரசியல் பணிசெய்துவிடுதலைக்கு பெரும் பங்காற்றி பரிஸ் மண்ணில் நயவஞ்சகத்தால் வீரகாவியமான லெப்ரினன் கேணல் நாதன் கப்டன் கஜன் ஆகியோரின் நினைவு சுமந்து நினைவெழுச்சி நிகழ்வு நடைபெற இருக்கின்றது