சுதந்திரதாகம்

பூர்வீகமண்ணில் வாழமுடியாது புலத்தில் இரவல் மண்ணில் நான்கு தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றோம். ஆனாலும் மண்ணையும் மக்களையும் மறக்காது அவர்களின் விடுதலைக்காக காலம் காலமாக கடினமாக உழைத்து வருகின்றோம்.

ஆனாலும் இன்னும் எமது நிலம் இருண்டுதான் இருக்கின்றது சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பு தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
இன்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் எங்கள் தோள்களில்தான் விடுதலைக்கான புனிதமான பணி சுமத்தப்பட்டிருக்கின்றது.இந்த பணிகளை நாம் ஆத்மாத்தமாக முன்னெடுத்து செல்கின்ற போதுதான் எமது இனத்திற்கான சுதந்திரக்காற்றை பெற்றுக்கொடுக்க முடியும்.

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் பல்வேறு போராட்டக்களங்கள் சர்வதேசப்பரப்பெங்கும் திறக்கப்பட்டு விடுதலைக்கான பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதேவேளையில் தமிழ்மக்களை விடுதலைத்தாகத்தோடு ஒன்றித்து இணைப்பதர்க்கான எழுச்சி நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஒன்றாகத்தான் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வும் அமைகின்றது.