மார்ச் 12 ஆம் திகதி ஐநா முன்றலில்  நடைபெற இருக்கும்  தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெறவிருக்கும்  பேரணியில் ஈழத்தமிழ் மக்கள் கலந்து கொள்ளுமாறு  தமிழகத்திலிருந்து இயக்குனர் திரு. மு.களஞ்சியம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

கலங்கி கிடக்கும் தமிழர் அல்ல நாம் காலத்தின் தேவை இது கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர் உலக தமிழினமே.

போராடுவோம்! இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தை தொடர்வோம்; போராடுவோம்! விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ, துரோகங்களால் துவண்டுவிடுவதோ அல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல. மாறாக, தடைகளைத் தகர்த்து விழ விழ விடாமுயற்சியுடன் எழுவது.

ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு ஐநா நோக்கி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் அலையென எழுவோம் .

ஜெனிவா பேரணி

காலம்: 12.03.2018 திங்கட்கிழமை
நேரம: 14.00 மணி தொடக்கம் 18.00 மணி வரை
இடம்: ஐ.நா முன்றல், ஈகை பேரொளி  முருகதாசன் திடல்.