கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஞாயிறு 14.03.2021, 11:00 மணி

ஈழத் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகட்கு நீதிவேண்டியும், இனவழிப்புச் செய்த சிங்களப் பேரினவாத அரசினைத் தண்டிக்கவும் பிரித்தானிய அரசைக்கோரும்
திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை பிரித்தானிய அரசு அதிகவனம் செலுத்தவேண்டும் என்பதை முன்னிறுத்தி நோர்வேத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்.

காலம்: 14.03.2021 ஞாயிறு மு.பகல் 11: 00 – 12:00 மணி

இடம்: நோர்வே பாராளுமன்ற முன்றல்,

அன்பார்ந்த தமிழ்மக்களே!
அரை நுற்றாண்டிற்கும் மேலாக தமிழினத்தின் மீது சிறிலங்காப் பேரினவாத அரசுகள் திட்டமிட்ட வகையில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக இனவழிப்பை நடாத்திவருகின்றன. 2009 மேயில் முள்ளிவாய்க்காலில் மானுட விழுமியங்களையெல்லாம் சிதைத்துத் தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்றுகுவித்தது சிங்கள அரசு. தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 46 வது மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசுமீது பிரித்தானியஅரசு கொண்டுவரும் தீர்மானத்தினை இன்னும் வலுவுடன் முன்னகர்த்திச் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தி நான்கு கோரிக்கைகளை முன்வைத்துப் பிரித்தானியாவில் 15 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் குரல் தனித்த ஒரு குரலல்ல. ஒட்டுமொத்த தமிழர்களினதும் தார்மீக ஆதரவு அவருக்கு உண்டு என்பதை பிரித்தானிய அரசிற்கும் உலக சமூகத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களின் வரிசையிலேயே இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக ஒன்றுகூடல் ஏககாலத்தில் இணையவழிக்கு ஊடாகவும் நடைபெறும்

Zoom இணையவழி முகவரி: 
https://us02web.zoom.us/j/83794209128?pwd=YWNSM3gzM3VmanlGaWExKzRpajdSQT09

திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் கோரிக்கை மனுவில் ஒப்பமிட்டு எமது பேராதரவினை வழங்கிடுவோம்.

மனுவில் ஒப்பமிடுவதற்கான இணைப்பு:
http://chng.it/spYVMQyq
இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் நிறைவில் பிரித்தானிய அரசு திருமதி. அம்பிகை செல்வக்குமாரன் அவர்களின் கோரிக்கையில் அதிகவனம் செலுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி நோர்வேத் தமிழ் அமைப்புகளின் சார்பில் நோர்வே பிரத்தானிய தூதுவரிடம் விண்ணப்பக் கடிதமும் கையளிக்கப்பட உள்ளது.

ஒழுங்குகள்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Ambikai 13.03.2021