தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து, அகிம்சை வழியில் போராடி, தனது உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் 34வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை 26.09.2021  நடைபெற உள்ளது.

திலீபன் என்று அழைக்கப்படும் இராசையா பார்த்தீபன், தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட, 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார். 12 நாள்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த அவர் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தனது உயிரை தமிழீழ விடுதலைக்காக ஆகுதியாக்கிக் கொண்டார்

ஒஸ்லோ வாழ் அனைத்து மக்களையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்

காலம்: 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 18:00 மணி

இடம்: TRVS (தமிழர் வள ஆலோசனை மையம்), Nedre Rommen 3, 0988 Oslo

ஒழுங்கமைப்பு: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Thileepan 2021--