தழிழீழத் தேசிய மாவீரர் நாள்  2021 ஒழுங்குகள்

எங்கள் தேசப்புதல்வர்களை நினைவுகொள்ளும் தேசிய மாவீரர் நாள் 2021, இந்த வருடம் Norges Idrettshøgskole இன் உள் மண்டபத்தில் நடைபெறும்.

மண்டப முகவரி: Norges Idrettshøgskole, Sognsveien 220, 0863 Oslo

5வது இலக்க நிலங்கீழ் தொடரூந்தின் (T-bane)  இறுதித் தரிப்பிடநிலையம் Sognsvann (T-bane stasjon) இல் இருந்து 4 நிமிடத்தில் நீங்கள் மாவீரர்நாள் மண்டபத்தை அடையலாம்.

எல்லா மக்களும் எங்களுக்கு உதவியாகவும், ஒத்தாசையாகவும் இருந்து  மாவீரர்நாள் வேலைத்திட்டத்தில் பங்குபற்றி,  இந்த வருட மாவீரர் நாளை சிறப்பாக நடாத்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வேண்டிநிற்கிறது

இந்த வருட மாவீரர்நாள் நிகழ்வுகள் தொடர்பான தகவல்கள் அறிவுறுத்தல்கள் தமிழ்முரசம் வானொலியிலும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Viber குழுமத்திலும் அறியத்தரப்படும்.

‘தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்!’
ஒழுங்குகள்
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

 

IMG_6239