தமிழ் இராசதந்திரம் சோதனைச்சாவடியில் June 14, 2015 Translated Feauture மக்களால் தெரியப்பட்ட தமிழ்நாட்டு அரசு “ஈழத் தமிழ் இனவழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும்” என ஒரேமனதாக தீர்மானம் எடுத்தது. மக்களால் தெரியப்பட்ட வடமாகணசபையும் இதே முடிவை எடுத்தது. இவை மக்கள் ஆணையை, விருப்பை ஏற்றுக்கொள்கின்ற ஜனநாயக பண்பிற்கு எடுத்துக்காட்டு. இது தவிர மக்கள் தீர்ப்பாயம் நடைபெற்ற – நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இனப்படுகொலைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. நீதவான் விக்னேஸ்வரனின் இராசதந்திரம் மக்கள் சார்ந்தது. ஆனால் பரிந்துரையில் நுழைந்த சுமந்திரனின் வாதமான “உள்ளுர் விசாரணை” என்பது எதையும் செயல்படுத்தாத, அடிப்படை பிரச்சனையை தவிர்த்து, இனப்படுகொலைக்கு யதார்த்தமான தீர்வை நுட்பமாக மழுங்கடிக்கும,; இராசதந்திர சமநிலையை மாற்றி இராணுவ சமநிலையை குழப்பி இறுதியில் போரின் முடிவையே மாற்றிய குற்றவாளிகளையும் குற்றம் சாட்டப்பட்ட சிங்களதேசத்தையும் பாதுகாக்கும் செயல். தொடரும் இனவழிப்பிற்கு ஒரு சர்வதேச விசாரணையும் முடிவில் அதற்கேற்ற தீர்வும். இவ்விடயத்தை உள்ளக விசாரணை என்ற தோரணையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாட்டிடம் விடுவது “இரு தரப்பு போர் குற்றத்தை” விசாரிப்பதை” விட மோசமானது. LLRC என்ற போர்வையில் இவ்விடயமே UNCHR மனித உரிமைக் கூட்ட தொடரில் மூலைக்கல்லாகியது. இனவழிப்பு விசாரணைக்கு இடம் கொடாமல் தமது இஸ்டப்படிக்கு தீர்ப்பு வழங்கும் நிறுவனங்களும் தனிநபர்களும் மனித குலத்திற்கே குற்றம் இழைக்கின்றனர். எந்தளவிற்கு இவர்கள் குறைத்து மதிப்பிட்டலும் ஈழத்தமிழரைப்பொறுத்ளவில் இது ஒரு முன்னுதாரணம். சிங்கள தேசத்தின் இராஜதந்திர நியதி தம்மை சர்வதேசம் உண்மையான சமரச முயற்சிகளை எவ்வாறு பார்க்கும் என்பதே. அல்லாமல் இனப்படுகொலையின் பங்குதார சக்திகளின் குடும்ப்ப “ஜனனாயக” ஊடகங்களின “சமரச” ஆலோசனைகளை அல்ல. தேசியவாதிகள் அல்ல உண்மையான பிரச்சனைவாதிகள். தமிழர் பிரச்சனைக்கான நியாமான தீர்வை நரித்தனமாக கையாளமுயலும் ஏகாதிபத்தியத்தின் சர்வதேச கைக்கூலிகளே பிரச்சனைக்குரியவர்கள். இன்றய கேள்வி யாதெனில், தமிழ்மக்களும் அவர்களை இன்று வழிநடத்துபவர்களும் பித்தலாட்ட, ஏமாற்று வழிநடத்தலை முளையிலே கிள்ளி எதிர்த்து ;போராடப்போகின்றார்களா அல்லது திருவாளர் எறிக் சூல்கைமின் சிந்தனைகளால் ஏமாற்றப்பட்டு, அழிந்து எதிர்கால சந்ததிக்கு பிரச்சனைய விட்டு வைக்கப்போகிறார்களா என்பதே ஆகும். இறுதிக்கணம் வரை தொடர்ந்த இராஜபக்ஸவின் இனவழிப்பு நடவடிக்கைக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் ஏமாளி தமிழ் பிரமுகர்களின் உதவிமூலமும் உள்நுழையும் திருவாளர் எறிக் சூல்கைமின் தற்போதைய சமாதான தரகிற்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை. வாசிங்கடனாலும் புது டில்லியாலும் உருவாக்கப்பட்ட ஆட்சிமாற்றம் உருமறைக்கப்பட்ட வடிவில் தொடரும் அதே தன்நலன்சார்ந்தவையே. தனது பிறப்பிலேயே இனவழிப்பு சித்தாந்தை கொண்டுள்ள சிறிலங்காவினதும் இனப்படுகொலையை பின்னின்று நடத்தியவரின் நலன் நோக்கியே தொடர்ந்தும் காய்கள் நகர்த்தப்படுகின்றன. இராஜபக்ஸ போய்விட்டார், புதுடில்லியில் ஆட்சி மாறியாயிற்று, தமிழ்நாட்டில் ஆட்சி மாறியுள்ளது, நோர்வே அரசும் சமாதானத் தரகர் எறிக் சூல்கைமை அப்புறப்படுத்திவிட்டது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் “அபிவிருத்தி நிதி” யை கையாளும் நபராக மீண்டும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் சில தமிழ் பிரமுகர்களினதும் விருப்பத்துடனும் களமிறங்கியுள்ளார் திருவாளர் எறிக் சூல்கைம். திருவாளர் எறிக் சூல்கைம் முன்னைனாள் அமெரிக்க உதவிச்செயலாளர் றொபேட் பிளேக்குடன் கூட்டாக செயல்பட்டு தமிழரின் விமரிசனத்திற்கு உட்பட்டவர். ஒருவேளை தன்னை அதி முக்கிய பிரமுகர் என்ற எண்ணத்தில் மிதக்கின்றாரோ என்னவோ. இராஜபக்ஸ கட்டளை முகவர் என்றவகையில் பொறுப்பாளி பிளேக் நிறைவேற்று அதிகாரம் கொண்டு; முகவருக்கு பணிகொடுத்தவர் என்றவகையில் பொறுப்பாளி;. எந்த சர்வதேச விசாரணையாவது இந்தியாவின் முன்னாள் தேசியபாதுகாப்பு ஆலோசகர்களுடன் இவ்விருவரையும் விசாரித்து எந்த பொறிமுறை மூலம் இனவழிப்பு நடைபெற்றது என்பதைக் கண்டறிந்து புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு காத்திரமான தீர்வைவழங்குமா ? திரு. எறிக் சூல்கைம் ஈழத் தமிழர்களை சாந்தப்படுத்தவே பயன்படுத்தப்பட்டார். இதையே இவர் தொடர்ந்து செய்துவருகின்றார். இத்துறையில் இவர் கைதேர்ந்தவரா, அல்லது விடுதலை என்ற தீர்வை குறிப்பாக ஈழத்தமிழரின் விடுதலை என்ற தீர்வை விரும்பாத “சர்வதேசம்” என அழைக்கபபடுகின்றவர்கட்கு வேலைசெய்யும் இவரின் விருப்பமோ, அல்லது சமாதானத்தரகில் தோல்வியைத்தவிர வேறொன்றையும் பார்க்காத இவரை சில தமிழ்ப்பிரமுகர்கள் இழுத்துவருகின்றனரோ தெரியவில்லை. திரு. எறிக் சூல்கைம் மீது தனிப்பட்ட கோப தாபம் இல்லை. ஆனால் இவர் இதுவரை தனது பிழைகளை ஒத்துக்கொள்ளவே இல்லை. ஒரு வேளை யாவும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவையோ அதுதான் தோற்ற எண்ணம் இல்லாத தன்மையோ. இவர் தனது உள்ளங்கையில் தீர்வு இருந்தது எனப்பேசுகின்றார். தமிழீழ விடுதலைப்புலிகள் மீதே முழுக்குற்றத்தையும் சுமத்துகின்றார் . நடந்த நடக்கின்ற இனப்படுகொலை பற்றி எதுவும் பேச மறுக்கின்றார்; ஏன் இனப்படுகொலை என்பதைக் கூட ஏற்க மறுக்கின்றார். இனவழிப்பும் கட்டுமானஇனவழிப்பும் இன்னும் பல ஆண்டுகள் தொடர இருக்கின்றன. ஏன் எனில் இதுவே இன்றய உலக ஒழுங்கை ஆட்படுத்திக்கொண்டிருக்கும் சக்திகளின் போக்காக உள்ளது. இப்ப ஒருவித “மன்னிப்போம் மறப்போம்” என்ற கதை அடிபடுகின்றது. உலகின் ஏனைய பகுதிகளில் தீர்வு வழங்கப்பட்ட முறமை பின்பற்றப்படவில்லை, ஏன் மோசமான படுபாதகம் நடைபெற்றதைக்கூட வெளிப்படையாகக்கூறப்படவது இல்லை. ஈழத்தமிழர்தான் மீண்டும் படுகொலைகாரருடன்; சேர்ந்து வாழும்படி அழுத்தப்படுகின்றார்கள். அதேவேளை தமிழரை தமது வியக்கத்தக்க விடுதலைப்போராட்டத்தை ஒரு தவறு எனப்பார்க்கத் தூண்டுகிறார்கள். இக்கோணத்தில் வரும் கட்டுரைகளை புது டில்லி பிரசுரிக்கும், அதே கோணத்தில் வரும் சினிமாக்களுக்கு “கேன்ஸ்” விருது கிடைக்கும். இவ்விடயங்களை தமிழ்நாடு சினிமாத்துறையும் இலக்கியவட்டங்களும் கவனித்து எதிர்கொள்ளவேண்டும். இறுதியான கேள்வி, தமிழ் அரசியல் இராஜதந்திரம் பித்தலாட்டாத்தில் ஏமாந்து அழிந்து போகப்போகின்றதா அல்லது தன்னை மீள்ஆய்விற்குட்படுத்தி புத்திசாதுரியமாக எதிர்கால சவால்களை எதிர்கொள்ளப்போகின்றதா. சுவிற்சலாந்தை வதிவிடமாகக் கொண்ட ஒரு தமிழ் ஆர்வலர ஒருவர் “ஏமாளி தமிழ் அரசியல் செய்வோர் மத்தியில் ஒரு எலிப்பந்தயம் நடைபெறுகின்றது” என் அண்மையில் கூறியிருந்தார். எலிகள் மட்டுமல்ல கொழுத்த பெருச்சாளிகளும் ஒட்டுண்ணிகளும் கூட எலிப்பந்தயத்தில் பங்கெடுத்து வருகின்றனர். நன்றி தமிழ்நெற்.