அண்மையில் பிரான்சிலிருந்து மனைவி பிள்ளைகளுடன் சிறீலங்காவிற்கு உல்லாசப் பயணம் சென்றவர் சிறீலங்காவின் ஒட்டுக் குழுவினால் கடத்தப்பட்டு மிகவும் கொடூரமான அனுவத்திற்கு உள்ளாகி உள்ளார்.

நீண்ட காலமாகப் பிரான்சில் வாழ்ந்து வந்த இந்தக் குடும்பத்தலைவர் சிறீலங்காவில் அமைதி நிலவுவதாகப் பரப்பப்படும் பொய்யான செய்திகளை நம்பி மற்றவர்கள் போல் இவரும் குடும்பத்துடன் உல்லாசமாகப் இபாழுது போக்க வலியும் வேதனையும் மிகுந்த, இராணுவ வலயமாக்கப்பட்டடிருக்கும் எமது தாயகத்திற்கு உல்லாசப்பயணம் சென்றுள்ளனர். அங்கு இன்று எமது இனம் எதிர் நோக்கும் அச்சுறுத்தலை இவரும் அடைந்துள்ளார். 

சிறீலங்காவின் விமான நிலையத்தில் சென்றிறங்கிய இவர்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் பகுதியினூடாக யாழ்ப்பாணம் செல்ல முயன்ற இவர்களிற்கு வழியில் ஆபத்துக் காத்திருந்துள்ளது.

அவர் குடும்பத்தினருடன் சென்ற வாகனம் அநுராதபுரத்திற்கு அண்மையில் ஒட்டுக் குழுக்களினால் வழி மறிக்கப்பட்டது. பின்னர் குடும்ப தலைவரை மட்டும் பிடித்துச் சென்ற ஒட்டுக்குழுவினர் சென்றவர்கள் தமக்குப் பத்து இலட்சம் ரூபா தந்தால் மட்டுமே அவர் பயணத்தை தொடர முடிமென கூறியுள்ளனர். அவர் தன்னால் அவ்வளது பணத்தை தரமுடியாது என முரண்பட்ட பொழுது அவரை கடத்தியவர்கள் பிரான்சில் காணி, வீடு வாங்கி வசதியாக இருக்கும் உன்னால் பணம் தரமுடியாதா என்று அவரை அச்சுறத்தி விட்டு அவரை மறித்து வைத்துக் கொண்டு குடும்பத்தினரைப் பணத்துடன் வரும்படி மிரட்டி விரட்டியுள்ளனர்.

இன்னமும் அந்தப் பணம் வழங்கப்படாததால் அவர் ஒட்டுக் குழுக்களிடமே சிக்கி உள்ளார். இதனால் இவரது குடும்பம் பணத்திற்காக அல்லாடுகின்றது.

எமக்கான தேசம் இன்னமும் அந்நியனின் அச்சுறுத்தலிற்கும் அராஜகங்களிற்கும் இடையில் தான் சிக்கிக் கிடக்கின்றது என்பதை எம்மக்கள் அல்லலுறும் அந்த மண்ணிற்கு உல்லாசமாக ஆடம்பரப் பயணம் செல்ல முனையும் புலம்பெயர் உறவுகள் உணர்வதற்கான முக்கிய தருணம் இது.