இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15வது தேசிய மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவாகியுள்ளதுடன் செயற்குழு தலைவராக இரா.சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவராக பொன்.செல்வராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.