படைப் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுவதனால் உயிருக்கு அச்சுறுத்தல் – முன்னாள் போராளிகள் April 3, 2015 News புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள், எந்தவொரு அரச விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடாத போதிலும், தாம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட, கண்காணிக்குக்குள்ளாக்கப்படுவதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளனர். தாம் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படுவதால், தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, எஸ். யோகேஸ்வரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் தெரிவித்தார். சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் காணாமற்போனதற்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களில் இவர் பங்கெடுத்து வருகிறார். இவரது கணவர், விடுதலைப் புலிகளின் அரசியல்துறையில் பணியாற்றியவர். 2009 மே 18ம் நாள், அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் அடிகளாருடன், இவருக்கு முன்பாகவே, அவர் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார். ஆனால், அதற்குப் பின்னர் அவர் என்னவானார் என்று கேள்விப்படவில்லை. “எனவே, இந்த இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுக்கிறேன். தீவிரவாத புலனாய்வு பிரிவு உள்ளிட்ட விசாரணைக் குழுவினர் அடிக்கடி எனது வீட்டுக்கு வருகின்றனர். மாலை நேரங்களில், அவர்கள் வரும் போது, நானும், எனது பிள்ளைகளும் அச்சமடைகிறோம்.” என்கிறார் 45 வயதுடைய, அந்த மூன்று பிள்ளைகளின் தாய். இந்தப் பகுதிகளில் “அடையாளம் தெரியாத நபர்”களால், நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவு மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் காரணமாக அச்சமாக உள்ளது. எனது பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுச் செல்வதில்லை. பாடசாலைக்கும் நானே கூட்டிச்சென்று திருப்பி அழைத்து வருகிறேன்” என்றார் யோகேஸ்வரி. சிறிலங்கா படையினர், கல்வித் தகுதியற்ற பெண்களுக்குக் கூட 30 ஆயிரம் ரூபா ஊதியத்துடன், வேலை வாய்ப்புக் கொடுத்துள்ளனர். ஆனால், எனக்கு கல்வித் தகைமை மற்றும் எழுதுனர் பணி அனுபவம் இருந்தும், என்னை அந்தப் பணிக்கு கருத்தில் கொள்ளவில்லை. மாதம் 6 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் போரிடும் அணியில் இருந்தவரான ஜெபநேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 2009இல் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டு, மோசமாக சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர். மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய இவர், பின்னர் குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் கொண்டுள்ள, நெருக்கம் காரணமாக, அரச புலனாய்வு அமைப்புகளால், கண்காணிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். “என்னை இன்னமும் தீவிரவாதியைப் போலவே, பார்க்கின்றனர். இங்கு அசம்பாவிதங்கள் நிகழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நான் விசாரணை செய்யப்பட்டேன். எனது வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.நான் ஒரு கேபிள் தொலைக்காட்சி வர்த்தகத்தை ஆரம்பித்த போது, அதனை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா படைகளிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் – சில தரவுகள் நான்காவது கட்ட ஈழப்போரின் முடிவில், சரணடைந்த 12,346 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில், 6 தொடக்கம் 7 வீதம் வரையிலானோர், கரும்புலிகள் அணியில் இருந்தவர்கள் என்று, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக தெரிவித்துள்ளார். கரும்புலிகள் அணியில், ஆண்களுடன் பெண்களும் இருந்தனர். ஆனால், 12,077 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூகத்தில் மீள இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது சமூகத்தில் அமைதியாக வாழ்கின்றனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலையான கரும்புலிகள் உள்ளிட்ட முன்னாள் போராளிகள், எவரும், குற்றங்களிலோ, வன்முறைகளிலோ ஈடுபடவில்லை. எனினும், புனர்வாழ்வுக்குப் பின்னர், சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில், ஆண், பெண் போராளிகளுக்கு இடையில் சிக்கலான வேறுபாடுகள் உள்ளன. ஆண்களை சமூகம் ஏற்றுக் கொண்டாலும், விடுவிக்கப்பட்ட 2269 பெண் போராளிகள், சமூகத்தில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். கரும்புலிகளின் மனோநிலையை, மாற்றுவது ஒன்றும் இலகுவான காரியமில்லை. அவர்களை விடுதலைப்புலிகள் மிக கவனமாகத் தெரிவு செய்து பயிற்சி அளித்துள்ளனர். சிங்களவர்களுக்கு எதிரான வெறுப்பணர்வு ஊட்டப்பட்டுள்ளது. உயிர்த் தியாகம் செய்வது, விடுதலைப் புலிகளின் போராட்டத்தில், மிகச் சிறந்த செயல் என்று நம்பிக்கையூட்டப்பட்டுள்ளது. இப்போது, முன்னாள் போராளிகள் வன்முறையை நிராகரிக்கின்றனர். இவர்களில் 8 வீதமானோர் மட்டுமே, காவல்துறை அல்லது, பாதுகாப்புப் படைகளில் சேர்ந்துள்ளனர். பெரும்பாலான முன்னாள் போராளிகள், ஆயுதங்களையோ, வெடிபொருட்களையோ, ஏந்த விரும்பவில்லை. அரசாங்க உதவியுடன் ஆண் போராளிகள், வேலை தேடிக் கொண்டுள்ளனர் அல்லது சிறு வியாபாரங்களில் ஈடுபடுகின்றனர். இவர்களில் 29 வீதமானோர், அரசாங்க கடன்களைப் பெற்று சிறிய வியாபாரம் போன்ற சுயதொழில்களில் ஈடுபடுகின்றனர். 16 வீதமானோர், பயிற்சி பெற்ற, பயிற்சி பெறாத தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர். 11 வீதமானோர், விவசாயத்திலும், 7 வீதமானோர் தனியார் துறையிலும், 4 வீதமானோர் அரசாங்கத்துறையிலும், 8 வீதமானோர் மீன்பிடியிலும், ஏனைய 8 வீதமானோர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திலும் பணியாற்றுகின்றனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 2269 பெண் போராளிகளில், சிலர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், பெண் போராளிகள் சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு ஆணையாளர் பணியகத்தின் பிந்திய அறிக்கையின் படி, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பெண்களும், சிறுவர்களும், சமூகத்தில் மரியாதையை இழந்துள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பெண்களில், 25 வீதமானவர்கள், கணவனை இழந்தவர்கள் அல்லது உடல் உறுப்புகளை இழந்தவர்களாவர். 2172 முன்னாள் போராளிகள் இன்னமும், புனர்வாழ்வு பெறாமல் உள்ளனர். அவர்கள் மீண்டும் ஆயுதமேந்தும் ஆபத்து உள்ளது. அவர்களைப் பிடித்து புனர்வாழ்வு அளிக்க சட்டரீதியான செயல்பாடுகள் ஏதும் எடுக்கப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவலரண்களை வலிமையாகவும் தந்திரோபாயத்தாலும் அமைப்பதோடு மட்டும் கோபித் மன நிறைவு சொள்ளமாட்டான். மேலும் அவை கலை நயமும் தூய்மையும் கொண்டவைகளாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவான். கோபித்தின் பிளாட்டூன் லீடர்களும் சென்சன் லீடர்களும் அவனுடைய ஆலோசனைகளுக்கும் அறிவுறுத்தல்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டனா் இதனாலேயே கோபித் பொறுப்பெடுத்த எந்த வேலையும் நேர்த்தியும் கலைநயமும் கொண்டவையாக இருக்கும். கோபித் தன்மானமும் கௌரவமும் பிடிவாதமும் கொண்ட ஒரு அணித்தலைவானக இருந்தான். தவிர்க்க இயலாத தருணங்களில் தனது பிடிவாத குணத்தைக் கைவிட்டாலும் சுயமரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டான். மேலும் அவனுடைய தன்னம்பிக்கை அளப்பரியது. இது வறட்டுத்தனமான, மனம்போன போக்கில் உதிக்கும் தன்னம்பிக்கையல்ல. நீண்ட பட்டறிவாலும் கூர்மையான மதிநுட்பத்தாலும் தளராத ஊக்கத்தாலும் விளைந்தவை அவை. அவனுடைய போராட்ட வாழ்க்கையில் இந்தத் தன்னம்பிக்கை எமக்கு மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டித்தந்திருக்கின்றன. சுட்டித்தீவிலிருந்து ஊரியான் வரையிலான முன்னரண் வரிசையில் சிறப்புத் தளபதி ராகவன் அவர்களின் வழிநடத்திலில் கொம்பின லீடராக கோபித் பணியாற்றிய காலங்களில் ராகவனின் நம்பிக்கைக்குரிய அணித்தலைவனாக பல்வேறு கடமைகளில் ஈடுபட்டான். தனது பகுதியில் விரைவிலேயே காவலரண்கள், நகர்வகழிகள் அமைக்கும் பணிகளை முடித்துக்கொண்ட கோபித் ராகவன் வகுத்த பயிற்சித் திட்டங்களை பொறுப்பேற்று செயற்படுத்தினான். தடையுடைப்புப் பயிற்சி, திசைகாட்டி மற்றும் புவிநிலை காண் தொகுதி (G.P.S) பயிற்சி, கண்காணிப்பு (O.P) பயிற்சி முதலியவற்றிக்கு பொறுப்பாளனாக இருந்து போர்ப்பயிற்சி ஆசிரியர்கள் சின்னமணி, கீதன், கில்மன் ஆகியோருடன் இணைந்து பயிற்சித்திட்டங்களை திறம்பட நடத்தினான். இக்கால கட்டத்தில் ஓய்வில்லாது நடமாடிக் கொண்டேயிருப்பான். தொடர் முன்னரண் வரிசை, கிளிநொச்சி, உருத்திரபுரம், திருவையாறு, குஞ்சுப்பரந்தன், முதலான பயிற்சித்தளங்கள் என எங்கும் கோபித்தின் பாதங்கள் படாத இடமே இல்லை என்று கூறும் அளவுக்கு அவனுடைய செயற்பாடுகள் பரந்து விரிந்து இருந்தன.Col Kopith 1 சூனியப் பகுதிக்குள் எதிரியின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், முன் தளத்தில் போராளிகள் பயிற்சிகளில் இருந்தபோது முன்னரண் வரிசைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ராகவன் அவர்கள் சிறிய பதுங்கித் தாக்கும் அணிகளை உருவாக்கி சூனியப் பகுதிகளில் நிலைப்படுத்தினார். அதில் செக்சன் லீடர் விஜித்திரனின் தலைமையில் ஒரு குழுவை கோபித் பொறுப்பேற்று நடாத்தினான். அந்த அணி பலமுறை எதிரியின் ஊடுருவல் முயற்சிகளை இடைமறித்துத் தாக்கியது. விஜிதரனின் சீரிய செயற்பாடுகளை இந்நடவடிக்கையில் கோபித் மேம்படுத்தி வளர்த்தான். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கை ஓட்டுசுட்டானில் துவங்கயிபோது கோபித் தடையுடைப்பு அணியின் கொமாண்டராகக் களமிறங்கினான். படையணியை சிறப்புத் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தின் மேலாளரும் இளம் தளபதியுமான நியூட்டன் அவர்களும் மேலும் சாரங்கள், சூசை உள்ளிட்ட அணித்தலைவர்களும் ஓட்டுசுட்டானில் வீரச்சாரைவத் தழுவிக்கொண்ட நிலையில், துணைத்தளபதி இராசிசிங்கத்தின் வழிநடத்தலில் கோபித் கடுமையாக போரில் ஈடுபட்டான். அம்பகாமம் களமுனையில் துணைத் தளபதி இராசசிங்கத்தின் வழிநடத்தலில் கோபிததின் செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன. கனகராயன் குளத்திலிருந்து எதிரியின் மிகப்பெரிய படைத்தளத்தை தாக்கியழித்துக் கைப்பற்றிய சமரில் கோபித் முக்கிய பங்காற்றினான். இத்தாக்குதலில் கோபித் கனரக ஆயுதங்களை மிகச் சிறப்பாகக் கையாண்டு எதிரிகளை விரட்டியடித்தான். ஓயாத அலைகள் – 03 தொடர்நடவடிக்கையால் மன்னார் களமுனை திறக்கப்பட்டு மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்பட்ட பிறகு அங்கிருந்த தாக்குதலணிகள் சற்றே இளைப்பாற பின் தளத்திற்கு தள்ளப்பட்டபோது அப்பகுதிகளின் பாதுகாப்புக்கடமை சாள்ஸ் அன்ரனி சிறப்புத் படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பள்ளமடுவில் இருந்து மடு – தம்பனை வரையிலான வீதிகளையும் காட்டுப்பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் சிறப்புத் தளபதி இராசசிங்கத்தால் கோபித் நியமிக்கப்பட்டான். அப்பொழுது பரப்புக்கடந்தான் காலையிலிருந்து பாப்பாமோட்டை வரையிலான பகுதிகளையும் கட்டுக்கரைக் குளம் காட்டுப்பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வீரமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது, இக்கடமையின்போது இரு அணித்தலைவர்களும் இணைந்து சிறு வேவு அணிகள், பதுங்கித் தாக்கும் அணிகள், றோந்துக்குழுக்கள் முதலானவற்றை உருவாக்கி மிகச் சிறப்பாக செயலாற்றினர். மேலும் தள்ளாடி முகாம் தாக்குதலுக்கான ஆயத்தப்பணிகளிலும் இருவரும் ஈடுபட்டனர். ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக பரந்தன் மீட்புச்சமர் துவங்கியபோது சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களின் பாதையில் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக கோபித் களமிறங்கினான். கோபித்தின் பாதையில் எதிரி மிக வலிமையான காவலரண்களை அமைத்து கனரக ஆயுதங்களால் காவல் செய்து வந்தான். இதனால் போராளிகளுக்கு சாதகமற்ற நிலை அங்கே நிலவியதை தனது தேர்ந்த அனுபவத்தால் அறிந்து கொண்ட கோபித் அங்க தனது அணிக்கு நிகழவிருந்த பெரும் அழிவைத் தவிர்த்துக் கொண்டு மற்றப்பாதையால் செல்ல முடிவெடுத்தான் அங்கு புலனாய்வுத் துறை தளபதி அறிவு அவர்கள் உடைத்த பாதையில் தனது அணியினை நகர்த்திய கோபித் எதிரியின் தொடர் காவலரண்களைத் தகர்த்தழித்துக்கொண்டு முன்னேறினான் A-9 வீதியில் கோபித்தின் தோழன் வீரமணி பிளாட்டூன் லீடர் மஞ்சுதனைக் கொண்டு தடையைத் தகர்த்தெறிந்து பரந்தன் சந்தியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த அதேவேளையில் கோபித் யு-9 வீதியின் வலப்பக்கமிருந்த வலிமையான காவலரண்களைத் தகர்த்தெறிந்து கொண்டு காளிதாஸ் வீடு என்று அழைக்கப்பட்ட எதிரியின் முக்கிய தளத்தைக் கைப்பற்றி போராளிகளின் நிலைகளைப் பலப்படுத்தினான். இந்தச் சமரில் முன்னனித் தாக்குதலணியிலிருந்து சண்டையிட்டுக் கொண்டே எறிகணைத் திருத்தங்களைச் சொல்லும் கண்காணிப்பு போராளிகாளாகவும் செயற்பட்ட பெருமையைப் பெற்றான முன்னாட்களில் பரந்தன் பகுதிகளில் மேற்கொண்டிருந்த வேவு நடவடிக்கைளின் அனுபவம் இந்தச் சமரில் அணிகளை இலகுவாக நடத்திச் செல்ல கோபித்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக இத்தாவில் தரையிறக்கச்சமருக்கான ஆயத்தவேலைகளில் கோபித் முழுவீச்சுடன் ஈடுபடுத்தப்பட்டான். குடாரப்பில் முதலாவதாக தரையிறங்கும் அணிக்கு கொமாண்டராகப் பொறுப்பேற்று களமிறங்கினான். ஐயன், இலக்கியன், பருதி, வீரன், இயல்வாணன் போன்ற அணித்தலைவர்களைக் கொண்டு விசேடமாக உருவாக்கப்பட்ட இவ்வணி குடாரப்புவில் முதலாவதாகத் தரையிறங்கி அங்கிருந்த சிறு முகாம்களையும் காவலரண்களையும் தகர்த்தழித்துக்கொண்டு இத்தாவில் பகுதிக்குள் நுழைந்து கணிசமான தொலைவை மிகவும் இரகசியமாகவும் விரைவாகவும் கடந்து ஏ-9 வீதியை அடைந்து, அங்கு சுமார் ஒரு கிலோமீட்டர் சாலையை உள்ளடக்கி இருபுறமும் மறிப்பைப்போட்டு, நான்கு பக்கங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தாக்குதலணி பாதுகாப்பாக உள்ளே வர வழிகோலினான். கோபித்தின் அணி அன்று அமைத்த பெட்டி வியூகம் ஒரு மாதத்திற்கும் மேலாக எதிரியால் உடைக்கப்படமுடியாமல் பாதுகாக்கப்பட்டு இறுதியில் ஆனையிறவை மீட்டுத்தந்தது. இத்தாவில் பெட்டி வியூகத்தின் ஏ-9 சாலையின் நாயகர்களாக நின்ற ஐயன், வீரன் சிந்து, இயல்வாணன், இலக்கியன், பருதி ஆகியோரை கோபித் மிகச் சிறப்பாக வழிநடாத்தினான். சாலைக்கு வலதுபுறம் வீரன் அணியும் இடது புறம் தேவனின் அணியும் முழுமையாக கோபித்தின் கட்டளையின் கீழ் செயற்பட்டன. சாலையைக் கைப்பற்ற எதிரி மேற்கொண்ட கடுமையானதொரு ”டாங்கி” தாக்குதலில் கோபித்தின் நிலை தகர்கப்பட்டு காவலரணிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டான். சில விநாடிகள் மூர்ச்சையாகிக் கிடந்த கோபித் மீண்டும் துடித்தெழுந்து அந்த சண்டையைத் தொடர்ந்து செய்தான். அன்று ஐயனும் பரிதியும் வீரச் சாவை தழுவிக்கொள்ள ஆவேசமடைந்த கோபித் இலக்கியன், தேவன், வீரன் முதலான அணித்தலைவர்களைக் கொண்டு மூர்க்கமாகிப் போராடி எதிரியை முறியடிக்க யு-9 வீதியை தக்கவைத்துக் கொண்டான். ஐயனுக்குப் பிறகு அணித்தலைவன் சிந்துவைக் கொண்டு வலிமையான பாதுகாப்பை அமைத்தான் கோபித்; கட்டளைத் தளபதி லீமா, சிறப்புத் தளபதி இராசிங்கம், இணைத்தளபதி நேசன் ; ஆகியோரின் சீரிய வழிநடத்தலோடு கோபித்தின் வேகமும் விவேகமிக்க செயற்பாடுகள் இறுதிவiரை இத்தாவலில் பகுதியின் ஏ-9 வீதியை பாதுகாத்து நின்றன. இயக்கச்சித் சந்தியிலிருந்த எதிரியின் பலம்மிக்க முகாம்களையும் நிலைமைகளையும் வீரமணி தகர்த்தெறிந்த மின்னல் வேகப் பாச்சலில் பளையைக் கடந்து இத்தாவிலில் இணைந்தபோது ஆனையிறவோடு சேர்ந்து பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்ட்டன. இச்சமரில் கோபித்தின் பங்களிப்பு அளப்பரியதாக இருந்தது. தேசியத் தலைவர் அவர்களாலும் மூத்த தளபதி காளலும் கோபித் வெகுவாக பாராட்டப்பட்டான். இயக்கத்தின் நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி அவர்கள் புதிய உந்துருளியொன்றை பரிசளித்து கௌரபவப்படுத்தினார். இச்சமருக்குப் பிறகு தேசியத் தலைவரும் தனிப்பட்ட பார்வையும் அக்கறையும் கோபித்தின் மீது திரும்பியது. தேசியத் தலைவர்கள் அவர்கள் கோபித்தைப் பாராட்டி மேலும் பல்வேறுவிதமான ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். ஆனையிறவு மீட்கப்பட்ட பிறகு தனங்கிழப்பு கிழக்கு அரியாலையிலிருந்து முன்னேறிய எமது படைப்பிரிவுகள் கனகம்புளியடி, கைதடிப்பகுதிகளை கைப்பற்றிக்கொண்டு யாழப்பாணம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் நாகர் கோவில் கைப்பற்றுவதற்கான ஆயத்தப் பணிகளில் கோபித் ஈடுபடுத்தப்பட்டான். எதிர்பாராத விதமாக சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள அடுத்த சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றார் சேகர் அவர்கள். நாகர் கோவில் பகுதியில் தாக்குதலுக்கான ஆயத்தப் பணிகளில் கோபித்தை முழுமையாக ஈடுபடுத்தினார். படையணியின் தாக்குதல் தளபதியாக கோபித் தீவிரமாகச் செயற்பட்டான். ஒயாத அலைகள் – 04 நடவடிக்கைக்காக தாக்குதலணி நகர்வதற்கான பாதையை உறுதிப்படுத்தும் பணியில் சேகர் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரியின் பதுங்கித் தாக்கும் அணியினரின் தாக்குதலுக்குள்ளான சேகர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வீரச்சாவை தழுவிக்கொண்டார். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி ஒருவருடத்திற்குள் மூன்று சிறப்புத் தளபதிகளை இழந்திருந்த மிகப் பெரிய சோக நிகழ்வினூடே தேசியத் தலைவர் அவர்கள் புதிய பொறுப்பாளர்களை படை யணிக்கு நியமித்தார். வீரமணி சிறப்புத் தளபதியாகவும் நகுலன் தளபதியாகவும் கோபித் துணைத் தளபதியாகவும் தலைவரால் நியமிக்கப்பட்டனர். ஓயாத அலைகள் – 04 நடவடிக்கை எதிர்பார்த்த இலக்கை அடையாவிட்டாலும் நாகர் கோவிலின் ஒரு பகுதியையும் எழுது மட்டுவாள் முகமாலையின் கணிசமான பகுதிகளை எமது படைப்பிரிவுகள் மீட்டன. இந்நடவடிக்கையில் கோபித் ஒரு பகுதியின் பொறுப்பாளராக இருந்து திறம்படச் செயற்பட்டார். 2001ம் ஆண்டு தைமாதத்தில் எமது தேசியத் தலைவர் அவர்களால் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறப்புத் தளபதி வீரமணி எமது பகுதியில் காவலரண்களை அமைக்கும் பணிகளை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொழுது எதிரி ஒரு பாரிய முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டான். வீரமணி அவர்களும் அவருடன் இருந்த அணிகளும் முற்றுகையை உடைத்து வெளியேறுவுதற்காக தாக்குதலை தீவிரமாக தொடுத்த பொழுது கோபித் முற்றுகைக்கு வெளியேயிருந்து மிகச்சரியாகத் திட்டமிட்டு ஒரு பாதையை தெரிவு செய்து கனரக மோட்டார் மற்றும் பீரங்கிச் சூட்டாதரவை வீரமணிக்கு வழங்கி தனது சிறப்புத்தளபதி பாதுகாப்பாக வெளியேவர வழிகோலினான். இந்நடவடிக்கையில் வீரமணியுடன் நின்று களமாடிய முதுநிலை அணித்தலைவன் சேந்தனும் மோட்டார் அணியின் கொமாண்டராக தீவிரமாக செயற்பட்ட பிருந்தாவனும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். எதிரியின் இம்முற்றுகையை உடைத்த சண்டையில் துணைத்தளபதி கோபித்தின் மதி நுட்பமும் விவேகமுமான செயற்பாடுகள் மிகவும் காத்திரமாக இருந்தன. இதன் பின்னர் முகமாலைக் களமுனையில் முன்னரண் வரிசை பாதுகாப்புக் கடமையில் படையணி ஈடுபடுத்தப்பட்டபோது கோபித் துணைத்தளபதியாகவும் ஒருபகுதியின் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். முன்வரிசையை வலிமைப் படுத்தியதோடு மட்டுமன்றி பின்தள கட்டளை நிலையங்கள் மற்றும் ஆதரவுத் தளங்கள் அனைத்தையும் வலிமைமிக்தாக கட்டமைத்து ஒரு முழுமையான முறியடிப்பு சண்டைக்கு தனது பகுதிகளை கோபித் தயார்படுத்தியிருந்தார். எதிரி மீண்டும் ஆனையிறவைக் கைப்பற்ற மேற்கொண்ட பாரிய நடவடிக்கையாலும் ஷதீச்சுவாலை| நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரை துணைத்ளபதி கோபித் மிகச் சிறப்பாக வழி நடாத்தினார். இந்தச் சமரில் கோபித்தின் கட்டளை மையம் எதிரியால் பலமுறை முற்றுகையிடப்பட்ட போதும் அவர் சிறிதும் கலங்காது முன்னரண் வரிசைச் சண்டையைத் தீவிரமாக நடத்தினார். இந்தச் சமரின் இறுதிக்கட்டத்தில், கோபித் நேரடியாகத் தனது குழுவுடன் முன்னரண் வரிசையில் இறங்கி, மிகத் தீவிரமான அதிரடித் தாக்குதல் மூலம் எதிரியை விரட்டியடித்து எமது பகுதிகளை முழுமையாக மீட்டெடுத்தார். கோபித்தின் தீர்க்கமான முடிவுக்கும்,கட்டளைகளும் இச்சமரின் வெற்றியில் பெரும் பங்காற்றின. இதன்பின்னர் நாகர் கோவிலில் படையணி நிலைகொண்ட போது அங்கு பகுதிப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். 2002ல் சிறப்புத் தளபதி வீரமணி அவர்களின் பணிப்பின் பேரில் பின்தள ஆழுகைக் கடமைகளில் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் படையணியின் பின்தள முகாம்களைப் புனரமைப்பதிலும் படையணிக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக் கொள்வதிலும் கோபித் கூடுதல் கவனம் செலுத்தினார். புதிய மருத்துவத்தளம். ஆளுமைத் தளங்கள் புதுப்பிப்பு, மாவீரர் மண்டபம் அமைத்தல் போன்ற பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து அவற்றை வெற்றிகரமாக செய்து முடித்தார். படையணியின் ஆளுகைப் போராளிகளிடையே கட்டுப்பாட்டையும் ஒழுக்க நெறிமுறைகளையும் பேணுவதில் கோபித் மிகுந்த அக்கறையெடுத்தார். ஆளுகையில் புதிய கட்டமைப்புக்களை உருவாக்கி வழிநடத்தினார். மாதந்தோறும் நிர்வாக ஒன்று கூடல்களை நடத்தி தெளிவான செயற்திட்டங்களை வகுத்துச் செயற்பட்டார். தளபதியாக தனது கடமைகளை விரிவுபடுத்தினார். ஆளுகைப் போராளிகள் அனைவரும் நாள்தோறும் குறுகிய நேரப் பயிற்சிகளில் ஈடுபட வழிகோலினார். இளம் அணித்தலைவர்களை ஊக்கப்படுத்தி மேலும் அவர்களுடைய திறமைகளை வளர்த்தெடுத்தார். குமுதன், சிலம்பரசன், தேவமாறன், கடற்கதிர் போன்ற இளம் அணித் தலைவர்களை பெரிதும் ஊக்கப்படுத்தி வளர்த்தார். யாழ் இன்பன், தமிழமுதன் போன்ற இளம் போராளிகள் பள்ளிக் கல்வியைத் தொடர வழி அமைத்ததோடு மேலும் அவர்ளை போராட்டத்தின் தேவைகளுக்கேற்ப பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்தி வளர்த்தெடுத்தார். ஆளுகைப்போராளிகள் சூட்டுப் பயிற்சிகளிலும் முறையான விளையாட்டுக்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.பயிற்சி, வேலைத்திட்டம், ஓய்வு, பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள் என ஆளுகைப் போராளிகளுக்கு அன்றாட நிகழச்சி நிரலை முறைப்படுத்தி நடாத்தினார். புதிய போராளிகளின் தனித்திறன்களை அடையாளம் கண்டு அவற்றை வளர்த்தெடுப்பதில் கோபித் தனிக் கவனம் செலுத்தினார். போராளிகளின் கல்வி அறிவை மேம்படுத்தி பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துச்செயற்படுத்தினார். அணித் தலைவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்கி ஆளுகைப் போராளிகளின் பல்வேறு கடமைகளூடே பயிற்சித் திட்டங்களையும் சரியாக நெறிப்படுத்தினார்.ஓயாத அலைகள் 03 நடவடிக்கை ஓட்டுச்சுட்டானில் துவங்கியபோது கோபித் தடையுடைப்பு அணியின் கொமாண்டவராகக் களமிறங்கினான். படையணியின் சிறப்புத் தளபதி ராகவன் அவர்களும் கோபித்தின் மேலாளரும் இளம் தளபதியுமான நியூட்டன் அவர்களும் மேலும் சாரங்கன், சூசை உள்ளிட்ட அணித்தலைவர்களும் ஓட்டுச்சுட்டானில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையில், துணைத் தளபதி இராசசிங்கத்தின் வழிநடத்ததில் கோபித் கடுமையாக போரில் ஈடுபட்டான். அம்பகாமம் களமுனையில் கோபித்தின் செயற்பாடுகள் மிகத்தீவிரமாக இருந்தன. கனகராயன் குளத்திலிருந்த எதிரியின் மிகப்பெரிய படைத்தளத்தை தாக்கியழித்துக் கைப்பற்றிய சமரில் கோபித் முக்கியப் பங்காற்றினான். இத் தாக்குதலில் கோபித் கனரக ஆயுதங்களை மிகச் சிறப்பாகக் கையாண்ட எதிரிகளை விரட்டியடித்தான். ஓயாத அலைகள் 03 தொடர் நடவடிக்கையில் மன்னார் களமுனை திறக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பெரும்பகுதிகள் எம்மால் மீட்கப்பட்ட பிறகு, அங்கிருந்த தாக்குதல் அணிகள் சற்றே இளைப்பாற பின்தளத்திற்கு நகர்த்தப்பட்ட போது, அப்பகுதிகளின் பாதுகாப்புக் கடமை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பள்ளமடுவிலிருந்து மடு – தம்பனை வரையான வீதியையும் காட்டுப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பில் சிறப்புத் தளபதி இராசசிங்கத்தால் கோபித் நியமிக்கப்பட்டான். அப்பொழுது பரப்புக் கடந்தான் சாலையிலிருந்து பாப்பாமோட்டை வரையிலான பகுதிகளையும் கட்டுக்கரைக் குளம் காட்டுப் பகுதிகளையும் பாதுகாக்கும் பொறுப்பு வீரமணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இக்கடமையின் போது இவ்விரு அணித்தலைவர்களும் இணைந்து சிறு வேவு அணிகள், பதுங்கித்தாக்கும் அணிகள், றோந்துக் குழக்கள் முதலானவற்றை உருவாக்கி மிகச் சிறப்பாக செயலாற்றினார். மேலும் தள்ளாடி முகாம் தாக்குதலுக்கான ஆயத்தப் பணிகளிலும் இருவரும் ஈடுபட்டனர்.ஓயாத அலைகள் 03 நடவடிக்கையின் தொடர்ச்சியாக பரந்தன் மீட்புச் சமர் துவங்கி யபோது சிறப்புத் தளபதி இராசசிங்கம் அவர்களின் பாதையில் தடையுடைப்பு அணியின் கொமாண்டராக கோபித் களமிறங்கினான். வீரமணி தடையுடைப்பு அணியின் கொமாண்டராக களமிறங்கினான். கோபித்தின் பாதையில் எதிரி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் வரலாற்றைத் தொகுக்கும் முயற்சியாக வெளியிடப்பட்ட நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்| நூலை வெளிக்கொண்டு வருவதில் கோபித் பெரும் பங்காற்றினார். இந்நூல் வெளியீட்டு விழாக்களை உணர்வு பூர்வமாகவும் கலைநயத்துடனும் நடத்துவதில் மிகுந்த அக்கறையெடுத்தச் செயல்படுத்தினார். இராகசீலம் இசைக்குழு உருவாக்குவதிலும் அதில் போராளிக் கலைஞர்களைப் பயிற்றுவித்து வளர்ப்பதிலும் கோபித் பெரும் பங்காற்றினார். போராளிகளின் புதிய முயற்சிகளை எப்பொழுதும் வரவேற்று ஊக்கப்படுத்தும் கோபித் போர்ப்பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற எமது இசைக்குழு நிகழ்ச்சியில் சின்னமணி ஆசிரியருடன் இணைந்து ஒரு பாடலைப் பாடி சிறந்த பாடகராக விளங்கினார். 2006ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக தேசியத் தலைவர் அவர்களால் கோபித் நியமிக்கப்பட்டார். சிறப்புத் தளபதியாக பொறுப்பெடுத்துக் கொண்ட சில மாதங்களிலேயே முகமாலைச் களமுனையில் சண்டை துவங்கியது. இச்சமரில் கோபித் சிறப்புத் தளபதியாகவும் பகுதிப் பொறுப்பாளராகவும் இருந்து செயற்பட்டார். பல்வேறு காரணங்களால் இச்சமர் எதிர்பார்த்த வெற்றியை எமக்குத் தராவிட்டாலும் படையணியின் செயற்பாட்டில் வீரியமும், வீச்சும் குறையாமல் கோபித் வழிநடத்தினார். படையணியின் தாக்குதல் தளபதிகளான தென்னரசன், வீரன், நாகதேவன், குட்டி உள்ளிட்ட பல அணித்தலைவர்களும் போராளிகளும் இச்சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நிலையிலும், ஏ- 9 வீதியையொட்டி நாம் கைப்பற்றிய பகுதிகளை இளம் தளபதி பாவலனைக் கொண்டு இறுதிவரை தக்க வைத்திருந்து கோபித் தனது திறமையை வெளிப்படுத்தினார். இச்சமரில் மோட்டார் அணித் தலைவர்கள் சிலம்பரசன், ஜெயசீலன் உள்ளிட்டோரை கோபித் மிகச் சிறப்பாக வழிநடத்தி அவர்களை மேலும் வளர்த்தெடுத்தார்.இதனையடுத்து 2006ம் ஆண்டு 10ம் மாதம் எதிரி பலையைக் கைப்பற்றமேற்கொண்ட பாரிய நடவடிக்கையை தடுத்து நிறுத்திய முறியடிப்புச் சண்டையை கோபித் சிறப்பாக வழிநடத்தினான். இச்சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதோடு எதிரி முற்று முழுதாக முறியடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டான். மிகச்சிறிய காலத்தில் காலத்தில் இம்முறியடிப்புச் சமருக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி பெரும் வெற்றியை கோபித் ஈட்டினார். இந்நடவடிக்கைக்குப் பின்னர் படையணிக்கு புதிய போராளிகள் அணியணியாக வந்த வண்ணமிருந்தனர். புதிய போராளிகளை களச்சூழலுக்குக்கேற்ப கோபித் பயிற்றுவிப்பதிலும் அவர்களின் உளவுதிரனை மேம்படுத்துவதிலும் கோபித் கூடுதல் கவனம் செலுத்தினார். புதிய பயிற்சித் தளங்களை நிறுவி இளம் அணித்தலைவர்களை உருவாக்குவதில் கோபித் பெரும் முயற்சி எடுத்தார். தாக்குதல் அணியால் களச்சூழலுக்கேற்ப விசேட அணிகளை உருவாக்குவதில் கோபித் மிகுந்த முக்கியத்துவம் எடுத்தார். படையணியின் தாக்குதல் தளபதிகளான வரதன், புரட்சி ஆசிரியர், செங்கோலன், விவேகானந்தன், அமுதாப், முத்தழகன், பாவலன், செல்லக்கண்டு முதலான தீரம்மிக்க போராளிகளை கோபித் சிறப்பாக வழிநடத்தினான். அணிகளைப் பிரித்துக் கொடுத்து கடமைகளில் ஈடுபடுத்தினார். பயிற்சிக் கல்லூரியில் அவர் மேற்கொண்ட கடும் உழைப்பின் பயன் பின்னாட்களில் நிகழ்ந்த சண்டைக் களங்களில் எமக்குப் பல வெற்றிகளை ஈட்டித்தந்தன. எதிரி மன்னார் ஊடாக தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க பாரிய நடவடிக்கைகளை துவங்கியபோது அவற்றைத் தடுத்து நிறுத்த தேசியத் தலைவர் அவர்கள் கோபித்தை மன்னார் களமுனைக்கு மாற்றினார். மடு, தம்பனை, இரணை, இலுப்பைக்குளம் பகுதிகளிலும் பனங்காமம், நட்டாஸ் கண்டல் பகுதிகளிலும் படையணி களமிறக்கப்பட்டது. இந்நாட்களில் எதிரியின் தொடர்ச்சியான முன்னேற்ற முயற்சிகளை கோபித் தடுத்து நிறுத்தியதோடு எமது பகுதிகளில் புதிய நிலைகளையும், வியூகங்களையும் அமைத்துப் பாதுகாப்பதிலும் கோபித் கடுமையாகப் பாடுபட்டார். தலைவரின் நேரடிப் பணிப்பின் பேரில் பல்வேறு அதிரடித் தாக்குதல்களை எதிரி மீது மேற்கொண்டு பல வெற்றிகளைப் பெற்றார். எமக்கு எதிராக மிகப்பெருமளவில் சதிச்செயல்களும் படைபலமும் எதிரியால் ஏவிவிடப்பட்டபோதும் கோபித் உறுதியுடன் நின்று தலைவரின் கட்டளைகளை நிறைவேற்றினார். மன்னார் பெரிய தம்பனையில் படையணியின் தாக்குதல் தளபதிகள் வீரமைந்தன் அணியையும் வாணன் அணியையும் கொண்டு கோபித் நடாத்திய மிகக்கடுமையான முறயடிப்புத் தாக்குதல்கள் எதிரியின் முன்னேற்றத்தைக் கணிசமான நாட்களுக்குத் தடுத்து நிறுத்தின. மிகவும் வஞ்சகமான சதிச்செயல்களால் இயக்கத்தின் பாதுகாப்பு வியூகங்களில் எதிரி முட்டுப்படாமல் தவிர்த்துக்கொண்டு காட்டின் வெவ்வேறு வழிகளில் முன்னேறிக்கொண்டிருந்தான். இந்நாட்களில் எதிரியின் நகர்வைச் சரியாக இனங்கண்டு வழிமறித்துத் தாக்குவதிலும், மேலும் முன்னேற விடாமல் தடுப்பதிலும் கோபித் கடுமையாகப் பாடுபட்டார். 2008ல் படையணியின் சிறப்புத் தளபதியாக விமலன் அவர்களை நியமிக்கப்பட்டு, கோபித் தேசியத் தலைவரின் நேரடிக் கட்டளையின் கீழ் மன்னார் களமுனையின் கட்டளைத்துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முழங்காவில் பகுதியில் எதிரியைப் பல நாட்கள் தடுத்து நிறுத்திப் போரிட்ட கோபித் வன்னேரிக் குளத்தில் எதிரியின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திக் கடுமையான சமர்களைப் புரிந்தான்