தமிழின அழிப்பின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் May 11, 2015 News மே 18. திங்கட்கிழமை மாலை 18.00 Oslo தொடருந்து நிலையத்தி ல் (Oslo Sentralstasjon) முன்பாக ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன் முடிவடையவுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இந்த நூற்றாண்டின் மிக கொடுமையான இனப்படுகொலை. கேட்பார் யாரும் இன்றி ஈழத் தமிழினத்தை எதேச்சை அதிகாரத்தோடு இலங்கை அரசு கொன்றொழித்த பேரவலமானது உலகத் தமிழினத்தால் என்றுமே மறக்க முடியாத ஆறாத வடு. கொத்துக் குண்டுஇ இரசாயனக் குண்டு மற்றும் பல்குழல் பீரங்கி என தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து ஈழத்தமிழினத்தை முற்றாக வேரறுக்கும் வெறியோடு இலங்கை அரசு நடாத்திய தமிழினப்படுகொலையின் வலி சுமந்த நினைவுகளை உலகத் தமிழினம் நெஞ்சினில் சுமந்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது ஒரு ஆரம்பம்! சர்வதேசமயப்படுத்தபட்ட தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஒன்றுபட்ட தமிழினமாக தொடர்ந்தும் பயணிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம். ஒழுங்கமைப்பு: நோர்வே ஈழத்தமிழர் அவை