தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேல்தல் பரப்புரைகளை முடக்குவதற்கு அரசாங்கம் சில சதி முயட்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடும் ஆதரவாளர்களை இலக்கு வைத்துள்ள பொலிஸார் அவர்களுக்கு பல்வேறு தெந்தரவுகளை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சாவகச்சேரி  பகுதிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு  25 பேர் கொண்ட குழு சென்ற வேளை அவர்களை பொலிஸார் கைது செய்து, தடுத்து வைத்துள்ளனர்.   இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்களை பொலிஸார் கடுமையாக அச்சுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக பதிவு இணையத்திற்கு  கருத்து  தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ;-

சட்டத்தினை மீறி நாங்கள் எந்த பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களில் சட்டதிட்டங்களை மீறி நாம் பிரச்சர நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதில்லை.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை திட்டமிட்டு தடுக்கும் முயற்சிகளிலேயே பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.எவ்வாறான தடை வந்தாலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடந்து முன்னெடுக்கப்படும். என்று தெரிவித்துள்ளனர்.

நன்றி;பதிவு