ஒஸ்லோ நோர்வேயில் கடந்த 25.09.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தியாகதீபம் திலீபன் நினைவும் சுதந்திரதாகம் எழுச்சி நிகழ்வு ம் உணர்வோடு நடைபெற்றது ஜநூறுக்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தனர் நிகழ்வானது அனைத்து மாவீர்கள் நினைவோடும் சுடர்வணக்கம் ஏற்றபட்டு மாவீரர்களுக்கும் மக்களுக்கும் நாட்டுப்பற்றாளர்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு மாவீரர்வணக்க நடனத்தோடு ஆரம்பமாகியது.p1p6

தொடாந்து  விடுதலைக்காக வீழ்ந்த தியாகதீபம் திலீபன் தளபதிகள் குமரப்ப புலேந்திலன் மற்றும் பத்து வேங்கைகள் 2ம் லெப்ரினன் மாலதி கேணல் சங்கர் லெப்ரினன் கேணல் நாதன் கப்டன் கஜன்  கேணல் ராயு ஆகியோரின் வரலாற்றுப்பக்கங்களை விபரணத்தினூடாக புரட்டிப்பார்க்க முடிந்தது.p2

p10இதனை தொடர்ந்து நடனங்கள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான விளக்க உரை  எழுகதமிழ் நிகழ்வில் முதலமைச்சர் அவர்களால் நிகழ்த்தப்பட்ட உரை மற்றும் நடனங்கள்  என்பனவற்றை தொடர்ந்து  சுதந்திரதாகம் பாடல்ப்போட்டி நிகழ்வு தமிழர் கலைபண்பாட்டுக் கழக இசைக்குழுவின் பின்னணி இசையில் மூன்று பிரிவுகளாக இடம்பெற்றது.p9

p7இடைவேளையின் பின் இளையவர்களின் தாய்மண்ணின் வலிசுமந்த நடனம் மற்றும்   the empire இசைக்குழுவின் பிரமிக்கவைக்கும் புரட்ச்சிகானங்கள் என்பனவும் இடம்பெற்றதோடு இறுதியாக சுதந்திரதாகம் சீட்டிழுப்பும் இடம்பெற்றது.p8

p5சீட்டிழுப்பில் முதல்பரிசான 3 பவுண் தங்கப்பதக்கம் 053 என்ற இலக்கத்திற்க்கும்  இரண்டாம் பரிசான 2 பவுண் தங்கப்பதக்கம்  376  இலக்கத்திற்க்கும்  மூன்றாவது பரிசான 1 பவுண் தங்கப்பதக்கம் 381 இலக்கத்திற்க்கும்  கிடைக்கப்பெற்றுள்ளது என்பதை தெரிப்படுத்திக்கொள்கின்றோம்p3p4