12144754_414752642057163_2042977055000303329_n

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலிகளின் 08ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள் இன்றாகும் 22/10/2015

விடுதலைப் போராட்ட வரலாற்றின் திருப்பு முனை எல்லாளன் நடவடிக்கையின் 8ம் ஆண்டு விரவணக்க நினைவுகள்

தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் எல்லாளனை சிங்களவர்களுக்கு காட்டி 8ம் ஆண்டு நினைவுநாள் 22/10/20125 இன்றாகும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ஏற்படுத்திய நாளாக 2007 ஆம் ஆண்டு காணப்படுகின்றது.

தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மாவீரர்களின் 8ம்ஆண்டு வீரவணக்க நினைவுநாள் இன்றாகும் 22/10/2015

தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி படம்எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை.

அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமானநிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்படுகின்றது.

அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன.

இந்த எல்லாளன் சிறப்பு நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 8ம் ஆண்டு வீரவணக்க நினைவுநாள் இன்றாகும். 22/10/2015

பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

அவர்களின் விபரம் வருமாறு:

லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் – திருகோணமலை)

லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் – யாழ்ப்பாணம்)

லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் – யாழ்ப்பாணம்)

மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் – யாழ்ப்பாணம்)

மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி – மட்டக்களப்பு)

மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் – யாழ்ப்பாணம்)

மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் – கிளிநொச்சி)

மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் தர்மினி (கணேஸ் நிர்மலா – கிளிநொச்சி)

கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் – யாழ்ப்பாணம்)

கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் – கிளிநொச்சி)

கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் – யாழ்ப்பாணம்)

கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் – யாழ்ப்பாணம்)

கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் – முல்லைத்தீவு)

கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் – மன்னார்)

கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் – யாழ்ப்பாணம்)

கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன – மட்டக்களப்பு)

கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி – யாழ்ப்பாணம்)

கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா – யாழ்ப்பாணம்)

கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் – யாழ்ப்பாணம்)

லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் – யாழ்ப்பாணம்)

‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும்.உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”
கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.