HomeTCCதமிழர்களே சிங்கள அரசின் பிரதிநிதிகளை வரவேற்காதீர்! October 9, 2026 TCC JVP-07.10.2026. ஊடகச்செய்தி நோர்வே உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில், சிறீலங்கா அரசாங்கத்தின் குறிப்பாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசின் பிரதிநிதிகள் தமிழரைச் சந்திக்கும் நகர்வுகள் தீவிரமடைந்து வருகின்றன. இத்தகைய சந்திப்புகள் வெறுமனே சமூக நல்லுறவு சார்ந்ததோ அல்லது இயல்பான நல்லெண்ணச் சந்திப்புகளோ அல்ல. புலம்பெயர் தமிழர்களை நோக்கி விரிக்கப்படும் இந்த அரசியல் சதிவலைக்குப் பின்னால் மிக நுட்பமான பொருளாதார, இராஜதந்திர மற்றும் பூகோள அரசியல் உள்நோக்கங்கள் உள்ளன. இதனால் ஏற்படக்கூடிய அரசியல், வரலாற்று மற்றும் கட்டமைப்புரீதியான நீண்டகாலப் பாதிப்புகளை உணர்ந்து புலம்பெயர் சமூகம் விழிப்புடன் செயற்பட வேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களின் மீட்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி மற்றும் போர்க்குற்றங்களுக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் ஆகிய அடிப்படை விவகாரங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லாத சூழலில், சிறீலங்கா அரசாங்கப் பிரதிநிதிகளுக்கு தமிழர் தரப்பில் அரசியல் அங்கீகாரமோ, பொதுவரவேற்போ வழங்கப்படுவதை நாம் வன்மையாக எதிர்க்கிறோம். இது தனிநபர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பற்றிய கேள்வி அல்ல மாறாக, ஒரு தேசிய இனத்தின் பெயரால் வழங்கப்படும் இத்தகைய வரவேற்புகள் சர்வதேச அரங்கில் பாரதூரமான கூட்டு அரசியல் பின்னடைவுகளை உருவாக்கும். 1.இயல்பு நிலை எனும் போலிப் பிம்பம் சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு) மற்றும் உலக வங்கியிடம் இருந்து கடன்களைப் பெறுவதற்கும், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கும் “சிறீலங்காவில் நல்லிணக்கம் ஏற்பட்டு நிலைமை சுமூகமாகிவிட்டது“ என்ற மாயையை சிறீலங்கா அரசு கட்டமைக்க முனைகிறது. NPP அரசாங்கப் பிரதிநிதிகளை புலம்பெயர் சூழலில் ஒருசிலர் வரவேற்பது, பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கும் அரசுக்கும் இடையே இயல்பான உறவு மலர்ந்துவிட்டதாக சர்வதேசத்திற்கு தவறான செய்தியைக் கடத்தும். இது, இலங்கைத் தீவில் தொடரும் கட்டமைப்பு ரீதியான இனவழிப்பை சர்வதேசத்தின் கண்களிலிருந்து மறைப்பதற்கே துணைபுரியும். 2. சர்வதேச நீதியையும் பொறுப்புக்கூறலையும் நீர்த்துப்போகச் செய்யும் சதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை (ருNர்சுஊ) மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐ.நா குழுவின் (ஊநுனு) 2024–2025 அறிக்கைகள், சிறீலங்காவில் நீதி மறுக்கப்படுவதையும், தீவிர இராணுவமயமாக்கல் மற்றும் தண்டனையற்ற ஆட்சிமுறை தொடர்வதையும் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளன. உலக நீதி மற்றும் அரசியல் தீர்வுக்கான உத்தரவாதங்கள் இல்லாத “நல்லெண்ணச் சந்திப்புகள்“ ஐ.நா மற்றும் சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசு மீதான இனப்படுகொலை போர்க்குற்ற விசாரணைகளுக்கான அழுத்தங்களை பலவீனப்படுத்துவதோடு தமிழர்களே அரசுடன் ஒத்துழைக்கிறார்கள் என்ற விம்பத்தை உருவாக்கி, சர்வதேச நீதிமன்றங்கள் நோக்கிய எமது நகர்வுகளை முடக்கும். 3. “நாம் இலங்கையர்“ என்ற கோசம் தமிழ்த்தேசிய அடையாளத்தை அழிக்கும் “நாம் அனைவரும் இலங்கையர்“ “தேசிய ஒருமைப்பாடு“ போன்ற பொதுவான சொல்லாடல்கள் மேலோட்டமான கவர்ச்சியைக் கொண்டிருக்கலாம் ஆனால் அவை தமிழர்களின் தனித்துவமான அரசியல் மற்றும் வரலாற்று இருப்பை திட்டமிட்டு அழிக்கும் நோக்கமுடையவை. 4. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புலம்பெயர் தமிழர்வளங்களைச் சுரண்டுதல் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள சிறீலங்கா அரசுக்கு, புலம்பெயர் தமிழர்களின் பணப்பரிமாற்றம் (சுநஅவைவயnஉநள) முதலீடுகள், சர்வதேச வர்த்தகத் தொடர்புகள் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் இன்றியமையாதவை. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் புளுPூ வரிச்சலுகையைத் தக்கவைக்க மனித உரிமை முன்னேற்றத்தை போலியாகக் காட்ட வேண்டிய தேவையும் அரசுக்கு உள்ளது. காலா காலமாக தமிழரின் பொருளாதாரத்தை அழித்தும் சூறையாடியும் வந்த சிங்கள அரசுகள் புலம்பெயர் தேசங்களில் தமது கடின உழைப்பினால் சேகரித்த பொருளாதாரத்தை முதலீடு என்ற போர்வையில் ஏமாற்றிப் பறிக்க முயல்கின்றனர். 5. சர்வதேச இராஜதந்திர அழுத்தங்களை உடைக்கும் தந்திரம் கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்குலகில் புலம்பெயர் அமைப்புகளால் முன்னெடுக்கப்படும் பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் மற்றும் மனித உரிமைப் பிரேரணைகள் மீதான பரப்புரைகளை (டுழடிடிலiபெ) பலவீனப்படுத்துவது அரசின் நோக்கங்களில் ஒன்று. தமிழ் மிதவாதத் தரப்புகளை முன்னிறுத்தி, உரிமைக் குரல் எழுப்பும் புலம்பெயர் அமைப்புகளை ஓரங்கட்டி சமூகத்தைப் பிளவுபடுத்தும் இராஜதந்திர வியூகத்தை சிறீலங்கா அரசு கையாள்கிறது. பூகோள அரசியல் மற்றும் இந்து சமுத்திரப் பிராந்தியப் பாதுகாப்பில் தமிழர் தாயகத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்ய இத்தகைய உறவாடல்கள் பயன்படுகின்றன. 6. “மண்ணின் மைந்தர்“ மேலாதிக்கமும் ஈழத்தமிழர் அடையாளமும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனையின்படி, இந்நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் சிங்களவர்களே, தமிழர்கள் சிறுபான்மையினராக அடங்கி வாழ வேண்டும் என்ற நிலைப்பாடே இன்னும் தொடர்கிறது. சிங்களத் தலைமைகளின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த வரலாற்றுப் பாடங்களைப் புறந்தள்ளிவிட்டு நாம் இயங்க முடியாது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தமது சுய அடையாளத்துடனும், ஈழ விடுதலை என்ற தொலைநோக்கு இலக்குடனும் உறுதியாக நிற்பதே அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பாகும். 7. புதிய முகம் — பழைய பாதை! ஊழல் எதிர்ப்பு, மாற்றுக் கொள்கை என்ற முழக்கங்களுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சியமைத்திருந்தாலும், தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான அடிப்படை அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அரசாங்கத்தின் பெயரோ, தலைவர்களின் முகங்களோ மாறுவது உண்மையான அரசியல் மாற்றமாகாது. சட்டம், கொள்கை, நில ஆக்கிரமிப்பு மற்றும் நீதி வழங்கல் ஆகியவற்றில் பழைய இனவாதக் கட்டமைப்பே தொடர்கிறது. புதிய முகம் வந்திருக்கிறது, தமிழர் தொடர்பாக அவர்கள் செல்நெறி மாறவுமில்லை, மாறப்போவதுமில்லை. புலம்பெயர் தமிழரை அணுக விழையும் சிறீலங்கா அரசாங்கத்திடம் நாம் முன்வைக்கும் கேள்விகள்: சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் பூர்வீக நிலங்கள் நிபந்தனையின்றி எப்போது முழுமையாக விடுவிக்கப்படும்? தமிழர் தாயகத்தில் அரச ஆதரவுடன் தொடரும் திட்டமிட்ட புத்தமயமாக்கல், விகாரை அமைப்புகள் மற்றும் தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்புகள் எப்போது நிறுத்தப்படும்? வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வெளிப்படையான விசாரணை எங்கே? செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் சர்வதேசக் கண்காணிப்புடனும் தடயவியல் நிபுணத்துவத்துடனும் எப்போது தோண்டப்பட்டு சுயாதீன விசாரணை நடத்தப்படும்? செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் சர்வதேசக் கண்காணிப்புடனும் தடயவியல் நிபுணத்துவத்துடனும் எப்போது தோண்டப்பட்டு சுயாதீன விசாரணை நடத்தப்படும்? யுத்தக் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்புக்கான பொறுப்புக்கூறல் எப்போது உறுதி செய்யப்படும்? வடக்கு-கிழக்கு தாயகப் பகுதிகளில் தொடரும் தீவிர இராணுவமயமாக்கல் எப்போது முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும்? தமிழர் நிலம், கடல் வளம் மற்றும் இயற்கை வளங்களின் மீதான அபகரிப்பு எப்போது நிறுத்தப்படும்? தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுத் தொல்லியல் தளங்கள் மற்றும் நினைவேந்தல் உரிமைகள் சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்படுமா? தமிழர்களை அச்சுறுத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Pவுயு) மற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் எப்போது முழுமையாக நீக்கப்படும்? தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வுக்கான அரசின் உத்தியோகபூர்வ வரைபு எங்கே? இவற்றிற்கு தீர்வில்லாமல் முன்னைடுக்கப்படும் இவ்வாறான சந்திப்புக்கள் மீண்டும் தமிழரை ஏமாற்றி “நாம் சிறீலங்கர்“ என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்த்தேசியத்தின் இருப்பை அழிப்பதாகும். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.